தமிழ்நாடு

“அ.தி.மு.க ஒன்றியக்குழு தலைவர் தொட்டதெல்லாம் ஊழல்” : சொந்தக் கட்சி உறுப்பினர்கள் புகாரால் பரபரப்பு!

அ.தி.மு.க ஒன்றியக்குழு தலைவர் தொடர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிட்ட 9 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர்.

“அ.தி.மு.க ஒன்றியக்குழு தலைவர் தொட்டதெல்லாம் ஊழல்” :  சொந்தக் கட்சி உறுப்பினர்கள் புகாரால் பரபரப்பு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க ஒன்றியக்குழு தலைவர் தொடர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிட்ட 9 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாவட்ட திட்ட அலுவலரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அ.தி.மு.க ஒன்றியக்குழு தலைவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அ.தி.மு.க உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.கவைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவர் இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற நாள் முதல் ஒன்றிய நிதியில் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாகவும், கொரொனா காலத்தில் பிளீச்சிங் பவுடர் வாங்குவது தொடங்கி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுத்து அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிட்ட 9 கவுன்சிலர்கள் திருத்தணி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரனிடம் கவுன்சிலர்கள் கோரிக்கை மனு அளித்ததை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் தலைமையில் 9 கவுன்சிலர்களும் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். மாவட்ட ஆட்சியர் இல்லாததால் மாவட்ட திட்ட அலுவலரிடம் மனு அளித்தனர். இந்த மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

banner

Related Stories

Related Stories