தமிழ்நாடு

குளிர்பானம் குடித்த 2 பேர் ரத்த வாந்தி.. மீண்டும் நடந்த அதிர்ச்சி சம்பவம் - ஆலையில் அதிகாரிகள் சோதனை!

திருவள்ளூர் அருகே குளிர்பானம் குடித்த இரண்டு பேர் ரத்தவாந்தி எடுத்து மயங்கியதையடுத்து கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள உற்பத்தி ஆலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

குளிர்பானம் குடித்த 2 பேர் ரத்த வாந்தி.. மீண்டும் நடந்த அதிர்ச்சி சம்பவம் - ஆலையில் அதிகாரிகள் சோதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவள்ளூர் அருகே உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் குடித்த இரண்டு பேர் திடீரென ரத்தவாந்தி எடுத்ததுடன் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள், அவர்கள் இரண்டு பேரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில், குளிர்பானம் தயாரிக்கும் இடம் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சப்பானிப்பட்டி என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடஷ் தலைமையில், அதிகாரிகள் ஆலையில் தயாரிக்கப்படும் மூன்று வகையான குளிர்பான பாட்டில்களையும் சென்னை, கிண்டியில் உள்ள அரசு பகுப்பாய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, கிருஷ்ணகிரி மாவட்டம், சப்பானிப்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரகத்தில் உள்ள இவர்களது குளிர்பான தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து சுற்று வாட்டாரப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளிலும் சோதனை நடந்து வருகிறது. அப்பகுதிகள் அனைத்திலும் குளிர்பானங்கள் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி முடிவுகள் வரும் வரை குளிர்பான ஆலையில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

banner

Related Stories

Related Stories