தமிழ்நாடு

செல்போன் ஆப் மூலம் மக்களின் புகார் மனுக்களை பெற சிறப்பு ஏற்பாடு : தி.நகர் தி.மு.க எம்.எல்.ஏ அசத்தல்!

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தி.நகர் தொகுதி தி.மு.க எம்எல்ஏ மக்கள் குறைகளை கேட்டுவருகிறார்.

செல்போன் ஆப் மூலம் மக்களின் புகார் மனுக்களை பெற சிறப்பு ஏற்பாடு : தி.நகர் தி.மு.க எம்.எல்.ஏ அசத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க அரசின் பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்கள் கடும் துன்ப, துயரங்களை சந்தித்து வந்தனர். பின்னர் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க வெற்றி வெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

இதையடுத்து 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்று தனி பிரிவு உருவாக்கி மக்களின் கோரிக்கைகள் 100 நாட்களில் நிறைவேற்றப்பட்டன. மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவில் மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் உற்சாகமடைந்திருக்கும் மக்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனுக்களைக் கொடுக்க குவிந்து வருகின்றனர். மக்களின் சிரமங்களை போக்கும் விதமாக மனுக்களை இணையத்தின் மூலமும் கொடுக்கலாம் என அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் தொகுதிகளில் மக்களின் கோரிக்களை விரைந்து நிறைவேற்றி வருகிறார்கள். இந்நிலையில், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி மக்கள் தொடர்புகொள்ளவும், மக்கள் குறைகளை விரைவாகத் தீர்த்து வைக்கவும் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அசத்திவருகிறார்.

செல்போன் ஆப் மூலம் மக்களின் புகார் மனுக்களை பெற சிறப்பு ஏற்பாடு : தி.நகர் தி.மு.க எம்.எல்.ஏ அசத்தல்!

மக்கள் தங்களின் குறைகளை கூறும் வகையில், பிரத்யோகமாக அடையாள அட்டை ஒன்று அச்சிடப்பட்டுள்ளது. இதில் வாட்ஸ் ஆப் எண், மின்னஞ்சல் முகவரி, க்யூஆர் குறியீடு போன்றவை அந்த அட்டையில் இடம் பெற்றுள்ளது. இதை பயன்படுத்தி தங்களின் கோரிக்களை பொதுமக்கள் தெரிவிக்கும் விதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அட்டையை தி.நகர் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து வீடுகளிலும் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் மக்கள் தெரிவிக்கும் குறைகளைச் சீர்செய்ய மற்றும் கண்காணிக்கப் பன்னாட்டு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும். மேலும் ஜே.ஐ.ஆர்.ஏ எனும் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரியவந்துள்ளது.

மேலும் புகார்களைத் தீர்த்துவைப்பது மட்டுமல்லாமல் அதற்கு ஆகின்ற நேரம் மற்றும் அதன் தற்போதைய நிலை ஆகியவை இம்மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. தற்போது இந்த சிறப்பு திட்டம் தி.நகர் தொகுதியில் உள்ள 130, 132, 133, 134, 140, 141 ஆகிய வட்டங்களுக்கு இம்முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. 135 மற்றும் 136 ஆகிய வட்டங்களுக்கு விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த சிறப்பு திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories