தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நெடுஞ்சாலை, பொதுப்பணி மற்றும் துறைமுகங்கள் துறை மீதான விவாதங்கள் நடைபெற்றது.
அப்போது, “ அதிமுக ஆட்சியில் சென்னை கூடுவாஞ்சேரி- மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைப்பதில் 1886.40கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது 132 கி.மீ அளவிற்கு 2 வெளிவட்ட சாலைகள் தொடங்கப்பட்டது. திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னை ஒட்டியுள்ள கூடுவாஞ்சேரி - மீஞ்சூர் முதல்கட்ட வெளிவட்ட சாலை தொடங்கப்பட்டது .
அது ஜி.எம்.ஆர் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்தது. அப்போது திமுக ஆட்சி காலத்தில் அந்நிறுவனத்துடன் 6 மாதத்திற்கு 63.13 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டாம் கட்ட வெளிவட்ட சாலை பணிகள் நடைபெற்றது. அதில் புதிய ஒப்பந்ததாரருக்கு கையொழுத்து போடப்பட்டது. 6 மாதங்களுக்கு 119.7 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது .
இதன் மூலம் தமிழக அரசுக்கு இரண்டம் கட்ட வெளிவட்ட சாலை அமைப்பதில் 1886.40 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளில் விலைவாசி ஏறி உள்ளது என்றாலும் அரசுக்கு 1600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.