தமிழ்நாடு

“3வது அலையை எதிர்கொள்ளத் தயாராகும் சென்னை” : புதிதாக 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை திறக்க நடவடிக்கை !

கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் புதிதாக மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

“3வது அலையை எதிர்கொள்ளத் தயாராகும் சென்னை” : புதிதாக 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை திறக்க நடவடிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் போது அ.தி.மு.க ஆட்சியில் முறையான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததன் விளைவாக கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது. பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடனே கொரோனாவை கட்டுப்படுத்தவும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளைத் தமிழ்நாடு அரசு இறக்குமதி செய்து, வெகு விரைவாகவே ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கியது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்றும் வெகுவாக குறைந்துள்ளது.

மேலும் இரண்டாவது அலையை விட மூன்றாவது அலை வேகமாக பரவக்கூடும் என்றும் இது குழந்தைகளை அதிகம் தாக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதனால் மூன்றாவது அலையை எதிர்கொள்ளவும் தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது.

குறிப்பாக மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகள் உருவாக்கும் பணிகளும், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

“3வது அலையை எதிர்கொள்ளத் தயாராகும் சென்னை” : புதிதாக 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை திறக்க நடவடிக்கை !

அதன்படி, முதல்கட்டமாக சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான இந்த உற்பத்தி நிலையத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சென்னையில் மணலி மற்றும் ஈஞ்சம்பாக்கத்திலும் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories