தமிழ்நாடு

பதக்க வாய்ப்பு நழுவியது: இந்தியாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.. மனு - சௌரப் கூட்டணி அதிர்ச்சி தோல்வி!

துப்பாக்கிச்சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் கலப்பு இரட்டையருக்கான பிரிவு போட்டியில், இந்தியா சார்பில் மனு பாகெர்-சௌரப் சௌத்ரி கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளனர்.

பதக்க வாய்ப்பு நழுவியது: இந்தியாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.. மனு - சௌரப் கூட்டணி அதிர்ச்சி தோல்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

துப்பாக்கிச்சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் கலப்பு இரட்டையருக்கான பிரிவு போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மனு பாகெர்-சௌரப் சௌத்ரி கூட்டணியும் யாஷஸ்வின்-அபிஷேக் வெர்மா கூட்டணியும் களமிறங்கியது.

மொத்தம் மூன்று சுற்றுகளாக இந்த போட்டி நடைபெற்றது. முதல் சுற்று முப்பது ஷாட்களுடைய மூன்று சீரிஸ்களை உடையது. முன்னாள் சாம்பியனான சீனா, தனிநபர் பிரிவில் தங்கம் வென்றிருக்கும் ஈரான் ஆகிய நாடுகளை தாண்டி மனு-சௌரப் கூட்டணி மிகச்சிறப்பாக முதல் சுற்றை ஆடியிருந்தது. முதல் இடத்தை இடித்து முதல் ஆளாக இரண்டாம் சுற்றுக்கு தகுதிப்பெற்றது.

முதல் சுற்றில் மனு பாகெர் தன்னுடைய மூன்று சீரிஸ்களில் 97,94,95 என்ற ஸ்கோர்களை எடுத்தார். சௌரப் சௌத்ரி இன்னும் சிறப்பாக 98,100,98 என மிரட்டினார். இரண்டாவது சீரிஸில் மொத்தமாக 10 ஷாட்களிலும் இலக்கின் மையத்தை துளைத்து 10 புள்ளிகள் எடுத்தார். மேலும், தொடர்ந்து 18 ஷாட்களில் 10 புள்ளிகளை எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

பதக்க வாய்ப்பு நழுவியது: இந்தியாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.. மனு - சௌரப் கூட்டணி அதிர்ச்சி தோல்வி!

முதல் சுற்றில் இன்னொரு இந்திய கூட்டணியான அபிஷேக் வெர்மா-யாஷஸ்வினி கூட்டணி 17 ஆம் இடம்பிடித்து ஏமாற்றியது. இரண்டாவது சுற்றில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் நான்கு சீரிஸ்கள் சுட வேண்டும். அதாவது, ஒருவர் இரண்டு சீரிஸ். முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி பதக்க சுற்றுக்கு செல்லும்.

முதல் சுற்றில் முதல் இடம்பிடித்திருந்ததால் மனு பாகெர்-சௌரப் சௌத்ரி கூட்டணி மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. நிச்சயமாக அடுத்தச்சுற்றுக்கு தகுதிப்பெற்று இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை வென்று கொடுப்பார்கள் என நம்பப்பட்டது. ஆனால், பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

முதல் சுற்றில் முதல் இடம்பிடித்தவர்கள், முக்கியமான இந்த சுற்றில் ஏழாம் இடமே பிடித்தனர். சௌரப் சௌத்ரி இந்த சுற்றிலும் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். தனக்குரிய 20 ஷாட்களில் 14 ஷாட்களில் துல்லியமாக இலக்கின் மையத்தை துளைத்து முழு 10 புள்ளிகளையும் பெற்றார். மனு பாகெரே சொதப்பியிருந்தார். தனக்குரிய 20 வாய்ப்புகளில் மூன்று முறை மையத்தை விட்டு தள்ளி சுட்டு எட்டு புள்ளிகளை மட்டுமே பெற்றார். இதுதான் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

பரபரப்பான திரில்லர் படத்தின் க்ளைமாக்ஸ் போலவே இருந்தது இந்த போட்டி. இருவரின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. வென்றிருந்தால் இந்தியாவே கொண்டாடியிருக்கும். ஆனால், இதுவும் ஒரு அனுபவமே. இந்தியாவுக்காக பதக்கம் வென்றிருக்கும் மீராபாய் 2016 இல் பளுவை தூக்கவே முடியாமல் தோற்றவர். இப்போது அவர்தான் இந்தியாவின் பெருமையாக வெள்ளி வென்றிருக்கிறார். மனு-சௌரப் இருவருக்குமே 19 வயதுதான் ஆகிறது. சீக்கிரமே மீண்டு வந்து பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருவருமே சாதிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories