தமிழ்நாடு

சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்... தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அமைச்சர்: குவியும் பாராட்டு!

சாலை வித்தில் சிக்கிய இளைஞரை தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்... தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அமைச்சர்: குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காரில் சென்று கொண்டிருந்தார். பூவிருந்தவல்லி அருகே சென்றபோது சாலையில் பொதுமக்கள் கூட்டமாக நின்றதைக் கண்டு அமைச்சர் தனது காரை நிறுத்தச் சொல்லி, அங்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். பின்னர் உடனே இந்த இளைஞரை தனது காரில் ஏற்றி பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்தார். மேலும் மருத்துவர்கள் இளைஞருக்கு சிகிச்சை அளிக்கும் வரை அருகே இருந்து அமைச்சர் பார்த்துக்கொண்டார்.

சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்... தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அமைச்சர்: குவியும் பாராட்டு!

பின்னர், இளைஞரின் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து, மருத்துவர்களிடம் அவருக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்குமாறு கூறியபிறகு தனது காரில் மீண்டும் கிருஷ்ணகிரி நோக்கிப் பயணித்தார்.

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இணையவாசிகள் பலர் அமைச்சர் மா.சுப்பிரமணியனை பாராட்டி வருகிறார்கள்.

காயமடைந்த இளைஞர் பூந்தமல்லி மேல்மாநகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பதும் அவர் தனியார் கம்பெனியில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories