தமிழ்நாடு

“16 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் உள்ள 3 வாசல்கள் திறப்பு” : அமைச்சருக்கு குவியும் பாராட்டு!

16 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் உள்ள மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு கோபுர வாசல்கள் திறக்கப்பட்டு, அந்த வாசல் வழியே பக்தர்கள் அனுமதிக்கபடுகிறார்கள்.

“16 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் உள்ள 3 வாசல்கள் திறப்பு” : அமைச்சருக்கு குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் மிகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்று நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களில் ஒன்று.

இக்கோயிலின் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த 7ம் தேதி சென்றிருந்தார். அப்போது, கோயிலின் வடக்கு வாசல், தெற்கு வாசல், மேற்கு வாசல் ஆகிய மூன்று வாசல்களும் கடந்த 16 ஆண்டுகளாக மூடப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், இந்த வாயில்களை திறக்க வேண்டும் என அமைச்சரிடம் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, மூடப்பட்டுள்ள வாயில்களை திறக்க வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து அமைச்சர் சேகர்பாபுவின் உத்தரவைத் தொடர்ந்து, மூடப்பட்டிருக்கும் மூன்று வாயில்களும் சுத்தப்படுத்தப்பட்டு, நேற்று நாதஸ்வரம் முழங்க 16 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மூன்று வாசல்களும் திறக்கப்பட்டன.

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றித் திறக்கப்பட்ட வாயில்கள் வழியாகப் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். நெல்லையப்பர் கோயிலில் 16 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த வாயில்கள் அமைச்சர் சேகர்பாபு உத்தரவைத் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கும், பக்தர்களும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அமைச்சர் சேகர்பாபுவுக்குப் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories