தமிழ்நாடு

திமிறி எழும் நியுசிலாந்து.. தில்லாலங்கடி காட்டும் இந்தியா: இறுதிக்கட்ட பரபரப்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

புஜாராவை விட பொறுமையான வில்லியம்சனின் அணுகுமுறை கொஞ்சம் கடுப்பேற்றியது. ஆனால், வில்லியம்சன் ஒரு இன்னிங்ஸை பில்ட் செய்வதில் கில்லாடி.

திமிறி எழும் நியுசிலாந்து..  தில்லாலங்கடி காட்டும் இந்தியா: இறுதிக்கட்ட பரபரப்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

நான்காவது நாள் ஆட்டம் மழையால் மொத்தமாக வாஷ் அவுட் ஆகியிருந்த நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 101-2 என்ற நிலையிலிருந்து நியுசிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கியது. வில்லியம்சனும் ராஸ் டெய்லரும் க்ரீஸில் தொடர்ந்தனர்.

இந்திய அணியின் சார்பில் இஷாந்த் சர்மாவும் பும்ராவும் ஓப்பனர்களாக களமிறங்கினர். இரண்டு அணிகளும் ரிசல்ட்டுக்காக முட்டி மோதும் என நினைக்கையில் இரண்டு அணிகளுமே டிஃபன்ஸிவ்வாக சென்றது அதிர்ச்சியாக இருந்தது. இந்திய பௌலர்கள் துணிச்சலாக ஃபுல் லெந்த்தில் வீசி ஸ்விங் செய்து நியுசிலாந்து பேட்ஸ்மேன்களை தடுமாற செய்ய வேண்டும். ரன்கள் போனாலும் பரவாயில்லை என இந்தியா ரிஸ்க் எடுக்க வேண்டும் என கமெண்ட்ரி பாக்ஸில் பேசிக்கொண்டே இருந்தனர். நமக்கு பார்க்கும்போதும் அப்படியே தோன்றியது.

இந்திய அணி மூன்றாம் நாளில் 62% பந்துகளை குட் லெந்த்தில் வீசியிருந்தனர். ஒரு சாதாரண நாளில் இது மிகச்சிறந்த பந்துவீச்சு என்று கூறலாம். ஆனால், நெருக்கடியான நிலையில் இப்படி சீராக வீசுவது மட்டும் போதாது. பேட்ஸ்மேனை ஷாட் ஆட வைத்து விக்கெட் எடுக்க வேண்டும். அதை இந்திய அணி தொடக்கத்தில் செய்ய தவறியது. ஸ்டம்புக்கு வெளியே நிறைய பந்துகளை வீசிக்கொண்டிருந்தனர். வில்லியம்சனும் ராஸ் டெய்லரும் முரட்டுத்தனமான டிஃபன்ஸிவ் மோடில் இருந்தனர்.

திமிறி எழும் நியுசிலாந்து..  தில்லாலங்கடி காட்டும் இந்தியா: இறுதிக்கட்ட பரபரப்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

இது நியுசிலாந்து அணிக்கு பின்னடைவையே கொடுத்தது. கையிலிருந்த போட்டியை கொஞ்சம் விட்டுவிட்டதாக தோன்றியது. ஒரு அரைமணி நேரத்திற்கு பிறகு இந்தியாவின் அட்டாக்கில் மாற்றம் தெரிய தொடங்கியது. விக்கெட்டுக்காக கொஞ்சம் முட்டி மோத தொடங்கினர். அவே டெலிவரிக்களை தவிர்த்து பேட்ஸ்மேன்களின் உடம்புக்குள் டைட்டாக வீச தொடங்கினர். ராஸ் டெய்லருக்கு லெக் சைடில் ஃபீல்டை டைட்டாக்கி பேடில் அதிகமான பந்துகளை வீசினார் இஷாந்த். இதற்கு, டெய்லரும் திணறவே செய்தார்.

கிட்டத்தட்ட 13 ஓவர்களுக்கு நியுசிலாந்து 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனால் ஒரு ரன் ப்ரஷர் உருவாகியிருந்தது. ஷமி கொஞ்சம் டைட்டாக வீசி விட்டு கொஞ்சம் ரூம் கொடுத்து ஒரு பந்தை வீச அதை ஷாட் ஆட முயன்று கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ராஸ் டெய்லர். மேலே குறிப்பிட்டதை போன்று குட்லெந்தை கொஞ்சம் குறைத்து ஃபுல்லாக்கியதால் இந்த விக்கெட் ஷமிக்கு சாத்தியப்பட்டது. இது ஒரு முன்மாதிரியாக அமைந்தது. இதை பின்பற்றி ஃபுல்லெந்தில் வீசி நிக்கோல்ஸை எட்ஜ்ஜாக்கினார் இஷாந்த்.

நிக்கோல்ஸ் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் நீண்ட நேரம் க்ரீஸில் நின்று நன்கு பொறுமையாக இன்னிங்ஸை ஆடியிருந்தார். அப்படியிரு இன்னிங்ஸை அவரை இங்கே ஆட விடாமல் தடுத்தது மிகச்சிறப்பு. செஷன் முடிவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னால் வாட்லிங்கை ஆஃப் சைடில் செட் செய்து டாப் ஆஃப் தி ஆஃப் ஸ்டம்ப்பில் வீழ்த்தினார். முதல் செஷனில் மொத்தம் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தது இந்திய அணி. பெரிய அபாயமாக வில்லியம்சன் மட்டும் க்ரீஸில் இருந்தார்.

திமிறி எழும் நியுசிலாந்து..  தில்லாலங்கடி காட்டும் இந்தியா: இறுதிக்கட்ட பரபரப்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

புஜாராவை விட பொறுமையான வில்லியம்சனின் அணுகுமுறை கொஞ்சம் கடுப்பேற்றியது. ஆனால், வில்லியம்சன் ஒரு இன்னிங்ஸை பில்ட் செய்வதில் கில்லாடி. ஒரு கியரிலிருந்து இன்னொரு கியருக்கு எப்போது மாறுவார் என்றே தெரியாது. அதனால் அவர் க்ரீஸில் இருப்பது அபாயமாகவே இருந்தது.

எதிர்பார்த்ததை போலவே இரண்டாவது செஷனின் தொடக்கத்திலேயே வில்லியம்சனும் வேகம் காட்டினார். நியுசிலாந்தும் வேகம் காட்டியது. வில்லியம்சன் ஒரு எண்ட்டில் ஜாக்கிரதையாக ஆட, இன்னொரு எண்ட்டில் க்ராண்ட்ஹோம், ஜேமிசன், சவுத்தி என அடுத்தடுத்த வீரர்கள் வேகமாக பவுண்டரிக்களை அடித்து ரன் கணக்கை கூட்டினர்.

ரொம்பவே கண்ட்ரோலாக ஆடிக்கொண்டிருந்த வில்லியம்சன் ஒருகட்டத்தில் பொறுமையிழந்து இஷாந்த் ஆஃப் ஸ்டம்புக்கு நன்கு வெளியே வீசிய பந்துக்கு பேட்டை விட்டு ஸ்லிப்பில் நின்ற கோலியிடம் கேட்ச் ஆனார். அணிக்கு லீட் எடுத்து கொடுத்திருந்தாலும் வில்லியம்சன் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும் முன்பு இஷாந்த் அவரை வீழ்த்திவிட்டார்.

திமிறி எழும் நியுசிலாந்து..  தில்லாலங்கடி காட்டும் இந்தியா: இறுதிக்கட்ட பரபரப்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

கடைசியில் சவுத்தி கொஞ்சம் சிக்சரெல்லாம் அடித்து அதிரடி காட்டினார். ஜடேஜாவின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று அவரும் அவுட் ஆக நியுசிலாந்து ஆல் அவுட் ஆனது. 32 ரன்கள் முன்னிலையோடு முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது நியுசிலாந்து. சரியாக நான்கு செஷன்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஒரு லோ ஸ்கோரிங் த்ரில்லராக ரிசல்ட் கிடைத்துவிடும் என்கிற குறைந்தபட்ச நம்பிக்கை உண்டாகியிருந்தது.

இந்திய அணியின் சார்பில் ரோஹித்தும் கில்லும் ஓப்பனர்களாக வந்தனர். முதல் இன்னிங்ஸில் இவர்களுக்கு சரியான லைன் & லெந்த்தில் வீசாமல் நியுசிலாந்து அணி சொதப்பியிருந்தது. ஆனால், இன்று மூர்க்கத்தனமாக அட்டாக் செய்தது. பெரும்பாலும் ஃபுல் லெந்த்தாக வீசி விக்கெட்டுக்கே முயன்றனர். குறிப்பாக, டிம் சவுத்தி மிரட்டினார். இதன் விளைவாக 11 வது ஓவரில் கில்லின் விக்கெட் கிடைத்தது. சவுத்தி இரண்டு மூன்று பந்துகளை ஸ்ட்ரைட்டாகவும் வெளியேயும் எடுத்துவிட்டு ஒரு இன்ஸ்விங்கரை வீச அதை கணிக்காமல் பேட்டுக்கு பேடுக்கும் இடையில் வாங்கி lbw ஆகினார். நம்பர் 3 ல் புஜாரா வந்தார்.

ஆச்சர்யமாக இன்று முதல் பந்திலேயே ரன் கணக்கை தொடங்கினார். புஜாராவுக்கு வழக்கமான இன்கம்மிங் ப்ளானையே நியுசிலாந்து வைத்திருந்தது. போல்ட் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்தெல்லாம் இன்கம்மிங் டெலிவரிக்களை வீசி புஜாராவின் விக்கெட்டுக்கு முயற்சித்தார். ஆனால், புஜாரா எப்படியோ சமாளித்துவிட்டார். ஒரு எண்ட்டில் கொஞ்சம் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார் ரோஹித். ஆனால், இன்றைய நாள் முடிவதற்கு ஒரு 20 நிமிடம் மட்டுமே இருக்கும்போது ரோஹித்தை டிம் சவுத்தி செட் செய்து வீழ்த்தினார். கில்லுக்குரிய அதே ப்ளான் தான் ரோஹித்துக்கும். நம்பர் 4 இல் விராட் கோலி இறங்கினார். கடைசி நேரத்தில் பவுன்சர்கள் மூலம் நியுசிலாந்து பௌலர்கள் வெறியாக தாக்கினார். கோலியே ஒரு பவுன்சரை தலையில் வாங்கினார். இப்படியாக இந்த நாள் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்திய அணி வெற்றி பெறுமா? அல்லது வெற்றிக்கு முயற்சியாவது செய்யுமா? என்கிற கேள்வி ரோஹித்தின் விக்கெட்டுக்கு பிறகு எழுந்தது. ஆனால், கோலியின் அணுகுமுறை கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. கடைசி சில நிமிடங்களே க்ரீஸுக்குள் நின்றிருந்தாலும் ரன் எடுப்பதற்கான முனைப்பை வெளிப்படுத்தினார். ஒரு வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் நிறைய சப்ரைஸ்களை ஒழித்து வைத்திருக்கிறது என நம்புவோமாக!

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories