கொரோனா தடுப்பு பணிக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஆய்வை முடித்துக் கொண்டு ராதாகிருஷ்ணன் திருத்தணிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் கன்றுக்குட்டி ஒன்று அடிபட்டு இருந்தது. இதைப் பார்த்த சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனே காரை நிறுத்தி, கன்றுக்குட்டிக்கு என்ன ஆனது என்று அறுகே சென்று பார்த்தார்.
பிறகு, லேசான காயங்களுடன் இருந்த கன்றுக் குட்டிக்கு அவரே முதலுதவி சிக்கைச் செய்தார். மேலும் திருவவள்ளுர் கால்நடை மருத்துவமனைக்கு அவரே ஃபோன் செய்து தகவல் தெரிவித்தார். பின்னர், மருத்துவமனையில் இருந்த வந்த ஆம்புலன்ஸில் கன்றுக்குட்டியை ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார். பிறகு அங்கிருந்து தனது காரில் திருத்தணிக்குச் சென்றார்.
சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த செயல் அங்கிருந்த பொதுமக்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரின் இந்த செயலுக்குப் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.