தமிழ்நாடு

“தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்து வரும் அ.தி.மு.க” : வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம் !

ஆவடி தொகுதியில் அமைச்சர் பாண்டியராஜனின் ஆதரவாளர்கள் தீவிரமாக வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்.

“தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்து வரும் அ.தி.மு.க” : வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம் !
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பல கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனால் தோல்வி பயத்தில் இருக்கும் அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்துவருகிறது. இந்நிலையில், ஆவடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் ஆதரவாளர்கள், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பணப்பட்டுவாடா செய்துபோது அ.தி.மு.கவினரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து கைது செய்தனர்.

“தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்து வரும் அ.தி.மு.க” : வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம் !
Kalaignar TV

மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 1.5 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர். அதேபோல் போடி தொகுதியில், போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் கவுன்சிலருமான சித்ரஞ்சன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தபோது அவரை தேர்தல் அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூபாய் 1.50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், புதுகோட்டை மச்சுவாடி பகுதியில் பணப்பட்டுவாடா செய்த அ.தி.மு.க நிர்வாகிகள் பழனி மற்றும் சதாசிவம் ஆகியோரை தேர்தல் அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூபாய் 50 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் நாளையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், அவசர அவசரமாக அ.தி.மு.கவினர் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்துவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories