தமிழ்நாடு

“பணப்பட்டுவாடா செய்வதில் தகராறு” : பா.ஜ.க மாவட்ட தலைவரை அரிவாளால் வெட்டு முயன்ற அ.தி.மு.க நிர்வாகி !

தேனியில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கட்சிகள் இடையே பணப்பட்டுவாடா செய்வதில் மோதல் ஏற்பட்டதில், பா.ஜ.க மாவட்ட தலைவரை அரிவாள் வெட்டு முயன்ற அ.தி.மு.க முன்னால் பேரூர் செயலாளர் பரபரப்பு ஏற்பட்டது.

“பணப்பட்டுவாடா செய்வதில் தகராறு” : பா.ஜ.க மாவட்ட தலைவரை அரிவாளால் வெட்டு முயன்ற அ.தி.மு.க நிர்வாகி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேனி மாவட்டம் போடித் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் போடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் அ.தி.மு.க தேர்தல் காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு காரியாலயத்தில் பா.ஜ.க மாவட்ட செயலாளர் மனோகரன் உள்ளிட்ட பா.ஜ.கவினர் இருந்தனர். மதுரை வந்த மோடி கூட்டத்திற்கு ஆட்களை கூட்டிச் செல்வது சம்பந்தமாக ஆலோசனை நடத்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது பழனிசெட்டிபட்டி முன்னாள் அ.தி.மு.க பேரூர் செயலாளர் முருகேசன் தேர்தல் காரியாலயத்திற்கு வந்து பா.ஜ.கவை சேர்ந்த மனோகரனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென அ.தி.மு.க முன்னாள் செயலாளர் முருகேசன், பா.ஜ.கவை சேர்ந்த மனோகரனை அரிவாளால் வெட்ட முயன்றார்.

இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் தடுத்து இருவரையும் சமாதானப்படுத்தினர். மோடிக்கு ஆட்களை கூட்டிச்செல்வதற்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் போடித் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டியில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளுக்கிடையே அரிவாள் வெட்டு வரை சென்றுள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க கட்சிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories