தமிழ்நாடு

“காணாமல் போனவர்கள் 40 நாட்களுக்கு பிறகு சாக்கு மூட்டையில் கண்டெடுப்பு” : பாட்டி-பேத்திக்கு நடந்தது என்ன?

தென்காசி அருகே 40 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பாட்டி, பேத்தி அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

“காணாமல் போனவர்கள் 40 நாட்களுக்கு பிறகு சாக்கு மூட்டையில் கண்டெடுப்பு” : பாட்டி-பேத்திக்கு நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரை சேர்ந்த உச்சிமாகாளி என்பவரது மனைவி கோமதியம்மாள். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கோமதியம்மாள் மற்றும் அவரது ஒன்றரை வயதான பேத்தி உத்ரா என்ற சாக்ஷி ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 12-ம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து உறவினர்கள் தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். இந்நிலையில் தென்காசி அருகே உள்ள முத்துமாலை புரம் கிராமத்தில் துர்நாற்றம் வீசிய நிலையில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில், பாவூர்சத்திரம் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு மூட்டை பிரித்துப் பார்த்த போது அதில் அழுகிய நிலையில் பிணம் இருப்பது தெரிந்தது. விசாரணையில் அது 40 நாட்களுக்கு முன்பு காணாமல் போன கோமதியம்மாள் மற்றும் அவரது பேத்தி உத்ரா என்ற சாக்‌ஷி ஆகியோர் என்பது தெரியவந்தது.

பாட்டி - பேத்தியின் உடலை கைப்பற்றிய போலிஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories