தமிழ்நாடு

“வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தி.மு.க தொடர்ந்து போராடும், தனிக்கட்சியாக நின்று போராடும்” : டி.ஆர்.பாலு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவலியுறுத்தி தி.மு.க தனிக்கட்சியாக நின்று போராடும் என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

“வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தி.மு.க தொடர்ந்து போராடும், தனிக்கட்சியாக நின்று போராடும்” : டி.ஆர்.பாலு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் காணொளிக்காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவைத் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் கலந்து கொண்டு பேசிய டி.ஆர்.பாலு எம்.பி., பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

“வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வேண்டும்.

அதுபோல் ஐ.நா சபையில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், மருத்துவ இட ஒதுக்கீட்டில் 50% இடஒதுக்கீடு வழங்குவது, ராணுவ ரகசியங்கள் கசிந்த விவகாரம், சீன ஆக்கிரமிப்பு உள்ளிட்ட ஆறு முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்” எனத் தெரிவித்தார்.

“வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தி.மு.க தொடர்ந்து போராடும், தனிக்கட்சியாக நின்று போராடும்” : டி.ஆர்.பாலு

கூட்டத்தின் இறுதியில் பிரதமர் கலந்துகொண்டார். அவர் பேசியதிலிருந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதையே பிரதமர் பேச்சு வெளிப்படுத்தியதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார். ஆனால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்காக தொடர்ந்து போராடும், தனிக்கட்சியாக நின்று போராடும் என்று உறுதிபட தெரிவித்தார்.

இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டதில் சதி நடந்து இருப்பதாக மத்திய அரசு மீது அவர் குற்றம்சாட்டினார். குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. சட்டங்கள் கொண்டு வருவதற்கு முன்பாகவே உணவு தானியங்களை சேமித்துவைக்க பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட கிடங்குகளை சில குறிப்பிட்ட நிறுவனங்கள் கட்டி இருப்பதாகவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories