தமிழ்நாடு

“ஒரு துணிச்சல்மிக்க தலைவரை முதல்வராக்கத் தயாராகிவிட்டது தமிழகம்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

ஒரு தலைவருக்கு துணிச்சல் வேண்டும்.. வீரம் வேண்டும்.. அத்தகைய தலைவர் மு.க.ஸ்டாலினை இந்த நாட்டின் முதல்வராக்க தமிழகம் முடிவெடுத்துவிட்டது.

“ஒரு துணிச்சல்மிக்க தலைவரை   முதல்வராக்கத் தயாராகிவிட்டது தமிழகம்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இன்னும் இரண்டே மாதங்கள் தான். ஆட்சியும் மாறப் போகிறது, காட்சியும் மாறப்போகிறது. நாட்டைச் சூறையாடி, நாட்டு மக்களை ஏமாற்றி வந்த பழனிசாமி கும்பலின் ஆட்சி முடியப் போகிறது. முற்றுப்புள்ளி வைப்பதற்குத் தயாராகிவிட்டார்கள் மக்கள். அந்திமக்காலத்தில் இருக்கும் அ.தி.மு.க ஆட்சி, தனது ஏமாற்றங்களை மறைப்பதற்காக திருவிழா நாடகங்களை நடத்திக் கொண்டு இருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு நினைவகம் திறக்கிறோம், அவர் வாழ்ந்த வீட்டை அரசுடமை ஆக்குகிறோம் என்ற போர்வையில் ஜெயலலிதா பேரைச் சொல்லி டெபாசிட் ஆவது வாங்க முடியுமா என்று பார்க்கிறார்கள். இவர்கள் ஜெயலலிதா வாழ்ந்த காலத்திலும் அவருக்குத் துரோகம் செய்தவர்கள். இறந்த பிறகும் துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஜெயலலிதா மரணம் அடைந்து நான்கு ஆண்டுகள் ஆனபிறகும் அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியிட முன்வராத பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் ஜெயலலிதாவைப் பற்றி பேச அருகதை இல்லை. இந்த அருகதை இல்லாத பழனிசாமி ஆட்சியில் மக்கள் அடைந்த துன்பம் அளவில்லாதது!

“ஒரு துணிச்சல்மிக்க தலைவரை   முதல்வராக்கத் தயாராகிவிட்டது தமிழகம்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

அந்தத் துன்பங்களை துடைக்கும் பணியை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போதே தொடங்கிவிட்டார். மக்கள் துயரைத் துடைக்க துப்பு இல்லாத பழனிசாமி, ‘இது மாதிரி நான் செய்ய இருந்தேன்’ என்கிறார். ‘அறுக்கத் தெரியாதவருக்கு 58 அரிவாள் எதற்கு?’ என்பார்கள்! அதைப்போல ஆட்சியையும் முதலமைச்சர் பதவியையும் வைத்து எதையும் செய்ய முடியாத பழனிசாமி, ஆட்சி முடியும்போது என்ன செய்வார்? என்ன செய்ய முடியும்?

“இதை எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்வி உங்களுக்குள் வரலாம். யாருக்கும் சந்தேகம் வேண்டாம்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள்: ‘சொன்னதைச் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்’ என்று! அவர் வழியில் நானும் சொன்னதைச் செய்வேன்! செய்வதைத்தான் சொல்வேன்!

தமிழகம் முழுவதும் வாங்கிய மக்களின் மனுக்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசில் தனித்துறை உருவாக்கப்படும். அந்தத் துறை, மாவட்ட ரீதியாக இந்த மனுக்களை பிரித்து பரிசீலித்து அதனை உடனடியாக நிறைவேற்றித் தரும் என்ற வாக்குறுதியை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் வழங்குகிறேன். தொகுதிவாரியாக - கிராம வாரியாக முகாம்கள் அமைத்து இப்பிரச்சினைகள் குறித்து நேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றித் தருவோம்.

அதாவது அ.தி.மு.க அரசாங்கம் செய்யத் தவறிய கடமையை தி.மு.க. அரசாங்கம் நிச்சயம் செய்து கொடுக்கும்! இந்தக் கடமையை தி.மு.க. அரசு நிறைவேற்றி முடிக்கும்போது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி குடும்பங்களின் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டு இருக்கும். ஒரு கோடி குடும்பங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கவலைகள், துன்ப துயரங்களில் இருந்து மீண்டிருப்பார்கள் என்று பேரறிஞர் அண்ணாவின் மீது ஆணையாக - தலைவர் கலைஞர் மீது ஆணையாக - தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக - நான் உறுதியேற்கிறேன்!

“ஒரு துணிச்சல்மிக்க தலைவரை   முதல்வராக்கத் தயாராகிவிட்டது தமிழகம்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

உங்களது பாரங்களை என் மீது வையுங்கள். நான் தீர்க்கிறேன்! உங்கள் கவலைகளை என்னிடம் சொல்லுங்கள். நான் நிவர்த்தி செய்கிறேன். உங்கள் குறைகளைச் சொல்லுங்கள். நான் நிறைவேற்றி வைக்கிறேன். உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு. நான் மட்டுமே பொறுப்பு.

சொன்னதைச் செய்வான் இந்த ஸ்டாலின்! செய்வதைத்தான் சொல்வான் இந்த ஸ்டாலின்!” என்பதைப் போன்ற பிரகடனம் வேறு எதுவும் இருக்க முடியாது! பல்லாயிரக்கணக்கான மக்கள் கோரிக்கை மனுக்களை திருவண்ணாமலையில் தலைவர் அவர்கள் வாங்கிய பிறகு பொதுமக்களை நோக்கி ஒருகேள்வியை கேட்டார். “அதுக்கு.. இந்த மாதிரி ஒரு ரசீது கொடுத்தாங்களா அந்த ரசீதை வாங்கிட்டீங்களா? காட்டுங்க!

அப்படி யாராவது ரசீது வாங்காம இருந்தீங்கன்னா.. இந்தக் கூட்டம் முடிந்ததும் போய் ரசீதை மறக்காம வாங்கிக்கோங்க அது சாதாரண ரசீது மட்டுமல்ல. அதை வைத்து நீங்கள் என்னைக் கேள்வி கே கட்கலாம். அதற்கான உரிமைச் சீட்டு அது.” என்று சொன்னார்!

இப்படிச் சொல்ல ஒரு தலைவருக்கு துணிச்சல் வேண்டும்! வீரம் வேண்டும்! அத்தகைய தலைவர் இந்த நாட்டின் முதல்வர் ஆனால்தான் தமிழகம் செழிக்கும் என்பதை தமிழகம் முடிவெடுத்துவிட்டது என்பதன் அடையாளம்தான் திருவண்ணாமலை கூட்டம்! தீபம் தமிழகத்துக்கு ஒளி கொடுக்கும்!

banner

Related Stories

Related Stories