தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 5,000 இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்: ஆவடி நாசர் பேட்டி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வரும் 30, 31 தேதிகளில் ஆவடியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 5,000 இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்: ஆவடி நாசர் பேட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சி 17வது வார்டில் தி.மு.க மக்கள் கிராம சபைக் கூட்டம் நகர செயளாலர் என்.இ.கே.மூர்த்க்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் இதுவரை 125 மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது என்றும்மொத்தம் 140 கூட்டங்கள்திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டது என்றார்.

இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி வரும் ஜனவரி 30, 31ம் தேதிகளில் ஆவடியில் 100 முன்னணி நிறுவனங்கள் பங்கு பெரும் வேலை வாய்ப்பு முகாமில் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 5,000 இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்: ஆவடி நாசர் பேட்டி

அதிமுக அமைச்சார் மா.ப.பாண்டியராஜன் கொரோனாவில் முகக்கவசம், கிருமினாசினி உள்ளிட்ட பொருட்களை வாங்கியதில் சுமார் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளதை குறித்து பொதுமக்களுக்கு ஆதரங்களுடன் தெரிவித்தார்.

அதிமுக அமைச்சர் மா.ப.பாண்டியராஜன் பட்டாபிராமில் தகவல் தொழில் நுட்ப பூங்காவை தேர்தலுக்காக 2 முறை திறப்பு விழா நடத்தி மக்களை ஏமாற்றுவதாகவும் அங்கு தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் திட்டமே இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த வார்டு அவைத்தலைவர் கோபி என்பவர் மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர் முன்னிலையில் தன்னையும் தனது ஆதரவளர்களுடன் திமுகவில் இணைத்துக் கொண்டார்.

banner

Related Stories

Related Stories