தமிழ்நாடு

அதிமுகவால் கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி சின்னாபின்னமான சுய உதவிக்குழுக்கள் - திமுக விவசாய அணி செயலர்

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சுய உதவி குழு இன்று கந்து வட்டிக்காரர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது என திருவேங்கடத்தில் சுய உதவிக் குழு பெண்களுடன் கலந்துரையாடிய AKS விஜயன் தெரிவித்துள்ளார்

அதிமுகவால் கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி சின்னாபின்னமான சுய உதவிக்குழுக்கள் -   திமுக விவசாய அணி செயலர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மாநில விவசாய அணி செயலாளர் ஏ கே எஸ் விஜயன் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவில் வளாகத்தில் உள்ள கடை வியாபாரிகள் சந்தித்து உரையாடினார்.

அப்போது அதே பகுதியில் கிளி ஜோசியரிடம் பேசியவர் தரையில் அமர்ந்து தனக்கு ஜோசியம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து கிளி சீட்டெடுக்க அதனைப் பார்த்து வாசித்த ஜோசியர் இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார். மேலும் தானும் திமுகவில் சேர ஆர்வமாக இருப்பதாக ஜோசியர் தெரிவித்ததை அடுத்து இணையதள சேர்க்கை மூலம் அவர் திமுகவில் சேர்க்கப்பட்டு அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

அதிமுகவால் கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி சின்னாபின்னமான சுய உதவிக்குழுக்கள் -   திமுக விவசாய அணி செயலர்

இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு சென்று அவர் பூ வியாபாரிகள் பூக்கட்டும் தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இதனை அடுத்து திருவேங்கடம் வந்த அவர் அங்கு தேவர் சிலைக்கு, இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கு தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழு பெண்களுடன் உடன் கலந்துரையாடினார். கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்படுவதில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஏ கே எஸ் விஜயன், பெண்கள் சுய முன்னேற்றத்திற்காக திமுக தலைவர் கலைஞர் சுய உதவி குழுவை தொடங்கினார்.

திமுக ஆட்சியில் சிறப்பாக நடைபெற்ற இந்த குழு தற்போது கந்து வட்டிக்காரர்கள் கையில் சிக்கி சின்னா பின்னமாகி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சுய உதவி குழுக்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும், இங்கே பேசிய பெண்கள் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர், 100 நாள் வேலை திட்டம் கட்டாயமாக 150 நாட்கள் ஆக உயர்த்தப்படும் ஊதியமும் 300 ரூபாய் வழங்கப்படும் என உறுதியாக தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

உறுதியாக கூற காரணம் பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்த ஆட்சி திமுக , பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் திருமண உதவித்தொகை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பெண் ஆசிரியை நியமனம், என திமுக ஆட்சி காலத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கு வழங்கப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு செல்லலாம், எனவே பெண்களாகிய நீங்கள் திமுகவிற்கு ஆதரவு தர வேண்டும் திமுக சாதி மதங்களை கடந்த ஒரு இயக்கம் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவா பத்மநாதன், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல் காதர், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, உள்ளிட்ட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories