காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது பட்டேல் (71) கொரோனாவால் பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அகமது படேல் காலமானார்.
இந்நிலையில், அகமது படேல் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி உள்ளிடோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்டோட் அகமது படேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இதனிடையே தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்டோட் அகமது படேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியில், “காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான திரு. அகமது படேல் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.