தமிழ்நாடு

“அவதூறு போஸ்டர் ஒட்டி மு.க.ஸ்டாலினை களங்கப்படுத்தும் அதிமுகவினர்” - நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டிய அ.தி.மு.கவினர் மீது கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

“அவதூறு போஸ்டர் ஒட்டி மு.க.ஸ்டாலினை களங்கப்படுத்தும் அதிமுகவினர்” - நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் வழக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவையை சேர்ந்த தி.மு.க நிர்வாகி தேவராஜ் தொடர்ந்த வழக்கில், கோவை மாவட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு மக்களிடம் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை அச்சடிதத்த அச்சகத்தின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களும் இல்லாமல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது என்றும் எனவே இந்த போஸ்டர்களை ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்டோபர் 25-ஆம் தேதி கோவை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இதுதொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் போஸ்டர் ஒட்டப்பட்டதைக் கண்டித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் குறித்து உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாமல் நடுநிலையோடு பாரபட்சமின்றி காவல்துறை செயல்படவேண்டும் என காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்.மேலும் போஸ்டர் ஒட்டிய விவகாரம் தொடர்பாக அ.தி.மு.கவினர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி ஏற்கனவே கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories