தமிழ்நாடு

“முதுகெலும்பற்ற எடுபிடி புழுக்களுக்கு சுயமரியாதை என்றாலே கூச்சம் வருகிறது” - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதற்காக 3 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

“முதுகெலும்பற்ற எடுபிடி புழுக்களுக்கு சுயமரியாதை என்றாலே கூச்சம் வருகிறது” - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ரங்கராஜன், ரஞ்சித், அசோக் ஆகிய மூன்று காவலர்களும் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதற்காக இந்த மூன்று காவலர்களையும் பழிவாங்கும் நோக்கோடு பணியிடமாற்றம் செய்து எடப்பாடி பழனிசாமியின் காவல்துறை உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை பெரியார் உள்ளிட்ட முன்னோடி தலைவர்களின் சிலைகளுக்கு காவித்துணி அணிவித்தும், காவி சாயத்தை பூசியும் அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத தமிழக அரசு, சிலைக்கு மரியாதை செய்த காவலர்களை தண்டித்திருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க அரசின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், "தந்தை பெரியார் தமிழகத்தின் அடையாளம் - அவரது இறுதி ஊர்வலத்தை அரசு மரியாதையோடு நடத்தியது முத்தமிழறிஞரின் கழக அரசு. ஆனால், பெரியார் சிலைக்கு மரியாதை செய்த காவலர்களை இடமாற்றம் செய்கிறது அடிமை அரசு. முதுகெலும்பற்ற எடுபிடி புழுக்களுக்கு சுயமரியாதை, மானம் என்றாலே கூச்சம் வந்து விடுகிறது." எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories