தமிழ்நாடு

இன்னும் எத்தனை நாட்களுக்கு தமிழகத்தை வஞ்சித்து பாஜகவுக்கு துதி பாடுவீர்கள்? - எடப்பாடிக்கு கனிமொழி கேள்வி

நீட் தேர்வு முடிவுகள் வெளியான போதும் தரவரிசை பட்டியலை வெளியிடாததற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு தமிழகத்தை வஞ்சித்து பாஜகவுக்கு துதி பாடுவீர்கள்? - எடப்பாடிக்கு கனிமொழி கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான போதும் மாணவர்களுக்கான மாநில தரவரிசை பட்டியலை வெளியிடாமல் மத்திய அரசு அலைக்கழித்து வருகிறது.

இந்த மாநில வாரி மதிப்பெண்களை வெளியிட்டால் மாணவர்கள் சுகாதார அறிவியல் இயக்குநரகத்தின் (DGHS) படி நடக்கும் கலந்துரையாடலில் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் போது உதவியாக இருக்கும். ஆனால் தற்போது தரவரிசை பட்டியல் வெளியிடப்படாததால் தமிழக மாணவர்கள் இந்திய அளவில் அரசு கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

உதாரணமாக, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் 250 இடங்களில் 37 இடங்களை DGHS-க்கு அரசு ஒதுக்குகிறது, முதல் 37 மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். ஆனால், 38வது தரவரிசையில் உள்ள மாணவர் அதே கல்லூரியில் சேர்க்கைக்கு மாநில ஆலோசனைக்குக் காத்திருக்க வேண்டியிருக்கும்.

இதனால் மாணவர்கள் அந்த கல்லூரியைத் தேர்வு செய்வதா இல்லை காத்திருக்க வேண்டுமா என்றக் குழப்பமும் கேள்வியும் எழும் நிலைக்கு தள்ளப்படுவர் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவரம் தொடர்பாக தி.மு.க மக்களைக்குழு துணைத்தலைவர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவுக்கு பெரும் சிக்கலை மத்திய அரசு மாணவர்கள் மீது திணித்துள்ளது. நீட் தேர்வு ஆணையம், மாநில வாரி மதிப்பெண் பட்டியலை வெளியிடாமல் தாமதப்படுத்துவதால், தமிழக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்க முடியாமல் அல்லலுற்று வருகின்றனர்.

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தமிழக முதல்வர் தமிழகத்தை வஞ்சித்து பாஜகவுக்குத் துதிபாடிக் கொண்டிருப்பார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories