தமிழ்நாடு

“பயோமெட்ரிக் சீர் செய்யும் வரை பழைய நடைமுறையில் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்”: தி.மு.க MLA கோரிக்கை!

பயோமெட்ரிக் எந்திரம் முறை சீராகும் வரை அட்டைதாரர்களின் நலன் கருதி பழைய முறையிலேயே ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ உதயசூரியன் வலியுறுத்தல்!

“பயோமெட்ரிக் சீர் செய்யும் வரை பழைய நடைமுறையில் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்”: தி.மு.க MLA கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 20-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் கைரேகை வைத்து ரேஷன் பொருட்களை வழங்கும் முறையில், கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் அலைகழிக்கப்படுவதாகவும் இதனால் அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கிராமப்புற மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உதயசூரியன், “கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை பெறுவதற்கு அங்குள்ள பயோ மெட்ரிக் எந்திரங்களில் அதிவேக இனைய சேவை வசதி கிடைக்காததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.

“பயோமெட்ரிக் சீர் செய்யும் வரை பழைய நடைமுறையில் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்”: தி.மு.க MLA கோரிக்கை!

பெரும்பாலவைர்கள் இரண்டு, மூன்று நாட்கள் அலைகழிக்கப்படுவதாகவும் இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுபதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் இந்த புதிய நடைமுறையில் உள்ள குறைபாடுகளை சீர் செய்யும் வரையில் பழைய நடைமுறையிலேயே ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories