தமிழ்நாடு

துபாயில் சிக்கி 6 மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பியவர் நடுவானில் உயிரிழந்த சோகம்!

துபாயிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் பயணித்தவர் நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் சிக்கி 6 மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பியவர் நடுவானில் உயிரிழந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

துபாயிலிருந்து சென்னைக்கு 190 இந்தியா்களுடன் தனியார் மீட்பு விமானம் இன்று காலை சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. காலை 9 மணியளவில் விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த திருவள்ளூா் மாவட்டம் வானகரம் அருகே அயனம்பாக்கத்தை சோ்ந்த கல்யாணசுந்தரம் (55) என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார்.

இதையடுத்து விமான பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்ததோடு, விமானிக்கும் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து விமானி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, விமான நிலைய மருத்துவ குழுவினரை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

விமானம் காலை 9.30 மணிக்கு சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியது. உடனடியாக மருத்துவக் குழுவினா் விமானத்திற்குள் ஏறி, கல்யாணசுந்தரத்தை பரிசோதித்தனா். ஆனால் அவா் சீட்டில் சாய்ந்தபடி உயிரிழந்த நிலையில் இருந்தாா். மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு நுரையீரல் பாதிப்பால் மாரடைப்பில் உயிரிழந்துள்ளாா் என்று தெரிவித்தனா்.

துபாயில் சிக்கி 6 மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பியவர் நடுவானில் உயிரிழந்த சோகம்!

இதையடுத்து விமான நிலைய ஊழியா்கள் அவா் உடலை கீழே இறக்கினா். அதோடு விமான நிலைய போலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலிஸார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதணைக்கு அனுப்பினா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

கொரோனா ஊரடங்கால் துபாயில் 6 மாதங்களாக சிக்கித்தவித்தவா், இன்று விமானத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, வீட்டிற்குச் செல்லும் முன்பு நடுவானிலேயே உயிரிழந்தது சகபயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories