திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு மற்றும் வைரஸ் பாதிப்பால் குறைதீர் கூட்டம் நடைபெறுவதில்லை.
இதனால் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குழந்தைகளுடன் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெயிலில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா காலத்தில், பொதுமக்களுக்கு காத்திருப்பதற்கு ஆட்சியர் அலுவகம் திறக்க்கப்படாமலும், தனியான இடம் அமைக்காதும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வரை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆட்சியர் அலுவலகத்திற்கு வராததால் கடும் வெயிலில் தங்களது குழந்தைகளுடன் பொதுமக்கள் மனு அளிக்க காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.