தமிழ்நாடு

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு எதிரொலி: ரத்தாகிறது இ-பாஸ் முறை? - இன்று மாலை அறிவிப்பு என தகவல்!

இ - பாஸ் அனுமதியை தொடர்வதா? அல்லது ரத்து செய்வதா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு எதிரொலி: ரத்தாகிறது இ-பாஸ் முறை? - இன்று மாலை  அறிவிப்பு என தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும் கட்டுப்பாடு விதித்து இ - பாஸ் முறை அமலுக்கு வந்தது. அண்மையில், இதன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் இ- பாஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இ- பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனை.

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில், மாவட்டங்களுக்கு இடையிலும் மாநிலங்களுக்கு இடையிலும் பயணத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு எதிரொலி: ரத்தாகிறது இ-பாஸ் முறை? - இன்று மாலை  அறிவிப்பு என தகவல்!

இ-பாஸை ரத்து செய்தால் கொரோனா தடுப்பு என்பது சவாலாகி விடும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இந்நிலையில், இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா வேண்டாமா? என்பது குறித்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன்படி இன்று மாலை கொரோனா தடுப்பு மற்றும் இ-பாஸ் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருடன் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளரின் ஆலோசனை நடைப்பெற இருக்கிறது.

banner

Related Stories

Related Stories