தமிழ்நாடு

“அரசு பணிகளில் வட‘இந்தி’யரை திணிக்காதே” வேல்முருகன் பேட்டி - ட்ரெண்டாகும் #தமிழகவேலைதமிழர்களின்உரிமை

தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப்பணிகளில் தமிழர்களை அதிகம் நியமிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

“அரசு பணிகளில் வட‘இந்தி’யரை திணிக்காதே” வேல்முருகன் பேட்டி - ட்ரெண்டாகும் #தமிழகவேலைதமிழர்களின்உரிமை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் 100 சதவிகிதமும் தமிழத்தைச் சேர்ந்தவர்களையே பணியில் அமர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுக்காவிட்டால் பாதுகாப்பு எல்லையை மீறி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களில் எல்லா பதவிகளையும் வடமாநிலத்தவர்களை மட்டும் பணி அமர்த்தும் தமிழக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தின் முன்பு அவரது கட்சி நிர்வாகிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் பேசியதாவது,

“நமது மண்ணின் மைந்தரான தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுகிறது. இந்த பதவிகளுக்கு அனைத்தும் திட்டமிட்டு வட மாநிலத்தை சேர்ந்த இந்தியை தாய் மொழியாக கொண்ட, மத்திய பிரதேசம், பீகார், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்களையே தொடர்ந்து பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

450 பதவியில் 435 இடங்கள் முழுக்க முழுக்க வட மாநிலத்தவர்களை திருச்சி ரயில்வே துறையில் நியமனம் செய்து இருக்கிறார்கள். இதேபோன்று பல்வேறு மத்திய அரசு துறைகளில் முக்கிய பணிகளில் வடமாநிலத்தவர்களுக்கு பதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து ஏற்கெனவே தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆனால் இதுவரையிலும் தமிழகஅரசு வாய்திறக்கவில்லை.

“அரசு பணிகளில் வட‘இந்தி’யரை திணிக்காதே” வேல்முருகன் பேட்டி - ட்ரெண்டாகும் #தமிழகவேலைதமிழர்களின்உரிமை

ஆகவே உடனடியாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒரு பதிலளித்து தீர்வு காணாவிட்டால், இந்த கொரோனா காலத்தில் கூட தடையை மீறி அவர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.

இதனையடுத்து #தமிழகவேலைதமிழர்களின்உரிமை என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த ஹேஷ்டேக் கீழ் பலரும் வட மாநிலத்தவர்களை பணியமர்த்துவதற்கு தங்களது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories