திருப்பத்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி : திருப்பத்தூர் தொகுதியில் உள்ள கலைக் கல்லூரி வளாகத்தில் ஆவின் பாலகம் அமைக்க வேண்டும்.
திருப்பத்தூரில் கொள்முதல் நிலையம், குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
காஞ்சிபுரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் : காஞ்சிபுரம் பகுதியில் எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்.
* காஞ்சிபுரத்தில் பட்டு மற்றும் ஜவுளித்துறைகளை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
செங்கம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கிரி : செங்கம் தொகுதி தானிப்பாடி ஊராட்சியில் அம்பேத்கர் நகரில் சமுதாயக் கூடம் அமைத்து தர வேண்டும்.
திண்டுக்கல் மாவட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் : திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைகள் குறித்து கவனயீர்ப்பு தீர்மானத்தை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார் மற்றும் ஆண்டி அம்பலம் ஆகியோர் கொண்டுவந்தனர்.
வேப்பனபள்ளி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் முருகன் : கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளியில் 1971ஆம் ஆண்டு கட்டிய பழைய பள்ளி இன்றும் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்படவில்லை. அதனை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
வேளச்சேரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வாகை.சந்திரசேகர் : வேளச்சேரி பகுதியில் கட்டப்பட்ட ரேஷன் கடை பயன்பாட்டுக்கு வரவில்லை. அது எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு : செய்யூர் தொகுதி சித்தாமூர் ஒன்றியம் சித்தார்காடு கிராமத்திற்கு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும்.
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் : ஆம்பூர் நகராட்சிப் பகுதியில் மின்சார தகன மேடை அமைக்கவேண்டும்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா : நல்லூர் - குருவங்கோட்டை கிராம சாலைகள் அமைக்கவேண்டும். உள்ளாட்சித் துறை மூலம் பயன்படுத்தப்படும் நிதிகளில் சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* அரசுப் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த சட்டமன்ற உறுப்பினர் நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளை திருத்த வேண்டும்.
வேலூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் : ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லப்படுகின்ற வேலூர் மாநகராட்சியில் நோய் தொற்று அதிகளவில் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
எழும்பூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் : எழும்பூர் தொகுதியில் உள்ள ஓட்டேரி மின் மயானத்தை நவீனமயமாக்க வேண்டும்.
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி : திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தாலுகா நீதிமன்றம் அமைக்கவேண்டும்.
கிருஷ்ணகிரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் : கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர் நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு : உயர்கல்வித் துறையில் அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
ஒட்டபிடாரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா : ஒட்டப்பிடாரம் வட்டம் ஒட்டரநத்தம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவேண்டும்.
திருத்துறைப்பூண்டி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் : திருத்துறைப்பூண்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லாததால் அந்த சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். அவசர சிகிச்சைக்கு அங்கு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் : துறையூர் தாலுகா மருத்துவமனையை மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவமனையாக மாற்ற அரசு முன்வரவேண்டும்.
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி : பல்லாவரம் பகுதியில் புதிய சார்பதிவாளர் கட்டிடம் கட்டித்தர அரசு முன்வரவேண்டும்.
அணைக்கட்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் : அணைக்கட்டு தொகுதி தனி தாலுகாவாக இருப்பதால் அங்கு 50 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. அங்கு சார்பதிவாளர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.
துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு : யானைகவுனி பகுதியில் மின்சாரத்துறை, ரயில்வே துறை பணிகளை துரிதமாக செய்து புதிய பாலத்தை திறக்க வேண்டும்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமசந்திரன் : பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.