கீழ்பெண்ணாத்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி : உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றும் நடவடிக்கையில் துரிதமாக செயல்பட வேண்டும்.
* கல்வித்துறையில் இடைநிற்றல் இல்லாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
* வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணிகளை விரைந்து மேற்கொள்ள பட வேண்டும்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் : குறிஞ்சிப்பாடி தொகுதியில் கருங்குழி ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு : உங்கள் ஆட்சியில்தான் மின்சார பற்றாக்குறையே இல்லை எனக் கூறிக்கொள்கிறீர்களே.. ஏன் நீங்கள் விண்ணப்பித்த அனைவருக்கும் கொடுக்கக் கூடாது?
* பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு பெறப்படும் பொதுமக்களின் பங்கீட்டு தொகைக்கு விலக்கு அளிக்கவேண்டும்.
திருச்செந்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் : சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்.
மைலம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி : மைலம் தொகுதியில் உள்ள கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் சவுக்கு மரங்களை பயன்படுத்தி காகித தொழிற்சாலை அமைக்க அரசு முன்வர வேண்டும்.
கன்னியாகுமரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் : கன்னியாகுமரி தொகுதி தடிக்காரன்கோணம் ஊராட்சி வீரபுளி கிராமத்தில் விதியை தளர்த்தி புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும்.
* மணல் மேடுகளை அகற்றி மாங்குரோவ் மரங்களை நட்டு இயற்கைச் சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க வழிவகை செய்யவேண்டும்.
தி.மு.க சார்பில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் : மதுரை விமான நிலையத்தில் ரன்வே பகுதியில் போதுமான விளக்குகள் இல்லை. 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்.
லால்குடி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் : லால்குடி ஊராட்சி ஒன்றியம் நெருஞ்சலக்குடி ஊராட்சி நியாய விலைக் கடை பள்ளிவயலில் பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்க வேண்டும்.
திருமயம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி : திருமயம் பகுதியில் உள்ள இரண்டு துணை மின் நிலையங்களையும் தரம் உயர்த்தி விவசாயிகளுக்கு சீராக மும்முனை மின்சாரம் வழங்கவேண்டும்.
நீலகிரி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் : நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு 100 பசுமை வீடுகள் கட்டித்தரவேண்டும்.
* தொழுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அவசர விபத்து சிகிச்சை ஏற்படுத்தி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற அரசு முன்வரவேண்டும்.
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன் : நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் ஒரு ராட்சச ஜெனரேட்டர் வைத்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
* இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் கேன்சர் மையத்தை திறக்க அரசு முன்வரவேண்டும்.
திருச்சி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு : திருச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் விவசாயத்திற்கு புதிய கல்லூரி அமைக்க அரசு முன்வர வேண்டும்.
* ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்ட திருச்சி மாநகர சாலைகள் கிராமங்களை விட மிகவும் மோசமாக உள்ள காரணத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வந்தவாசி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் : வந்தவாசியில் 50,000 ஏக்கர் அரசு நிலங்கள் உள்ளது. அதனால் உடனடியாக வேளாண் கல்லூரி அல்லது தோட்டக்கலை ஆராய்ச்சிக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும்.
மதுராந்தகம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி : தி.மு.கவை போலவே ஆளும் கட்சியும் மாணவர்களை இளைஞர்களை ஊக்குவிப்பதற்கு போட்டிகள் நடத்தவேண்டும்.
செங்கம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கிரி : செங்கம் பகுதியில் உள்ள அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் கோவிலை கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குளித்தலை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராமர் : குளித்தலை தொகுதி கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் போத்துராவுத்தன்பட்டியிலுள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு ஆவன செய்யவேண்டும்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காந்தி : தண்டலம் பகுதியில் உள்ள பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர அரசு ஆவன செய்யவேண்டும்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா : ஆலங்குளம் பகுதியில் அரசு உதவிபெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வசதிகளைச் செய்து தர அரசு ஆவன செய்யவேண்டும்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு : துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு கொளத்தூர் பகுதியிலும் 2007ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்ட 33/11 கிலோ வாட் மின் நிலையம் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது. வருங்காலங்களில் அந்தத் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மின்துறை அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி காலதாமதம் ஏற்படாமலிருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் : தூத்துக்குடி மாநகரத்தில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்கவேண்டும்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் : ஆலந்தூர் பகுதியில் கழிவுநீர் நிலையம் விரைவில் அமைக்கப்பட வேண்டும்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் : விருதுநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட சாத்தூர் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவர வேண்டும்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் : திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் நியாய விலைக் கடை அமைக்கப்படவேண்டும்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சீதாபதி : திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நொளம்பூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்.