தமிழ்நாடு

“பொண்ணு கொடுக்க யோசிக்குறாங்க ” : பேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் உத்திரமேரூர் ஊராட்சி மக்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

“பொண்ணு கொடுக்க யோசிக்குறாங்க ” : பேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் உத்திரமேரூர் ஊராட்சி மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஞ்சிபுரம் மாவட்ட உத்திரமேரூர் ஊராட்சியில் உள்ள முகக்கேரி, ஆண்டிதங்கல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

கூலி வேலை செய்துவரும் பெரும்பாலான மக்கள் வாழும் இந்த பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு 6 கி.மீ மேலாக நடந்து செல்ல வேண்டிய நிலையே உள்ளது. குழந்தைகள் தினமும் பள்ளிக்கு நடந்து செல்வதாவதாகவும், வேலைக்கு செல்வோறும் மிகுந்த சிரமங்களை சந்திப்பதாகவும் கூறுகின்றனர்.

பல நேரங்களில் பள்ளி கல்லூரிக்கு செல்லமுடியாத நிலையில், பள்ளி மதிய நேரத்தோடு முடிந்தால், சுட்டெரிக்கும் வெயிலில் நடந்தவாரு வீடு திரும்ப முடியாமலும் தவித்து வருகின்றனர். அதேப்போல் இரவு நேரங்களில் வேலைக்குச் சென்று வரும் பெண்களும் தினமும் சிரமப்பட்டு ஊர் திரும்புகின்றனர்.

“பொண்ணு கொடுக்க யோசிக்குறாங்க ” : பேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் உத்திரமேரூர் ஊராட்சி மக்கள்!

அவசரத்தில் வெளியூரோ மருத்துவமனையோ செல்லவேண்டும் என்றால் சிறியவர்களும் முதியவர்களும் நடந்தேதான் செல்வதாகவும், எங்கள் ஊர் இளைஞருக்கு ஊராட்சி பெயரைக் கேட்டதுமே பெண் கொடுக்க மறுக்கிறார்கள் என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி பல முறை பேருந்துவசதி கேட்டு மனு கொடுத்தும் எந்த பயனுமில்லை. ஓட்டுக்காக வந்த அமைச்சர் அதுக்கு பிறகு வரவே இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories