தமிழ்நாடு

“அதிமுக-விற்கு வாக்களிக்காத ஆத்திரத்தில் பெட்டிகளுக்கு தீ வைக்கிறார்கள்” : கே.ஆர்.ராமசாமி குற்றச்சாட்டு!

அ.தி.மு.கவிற்கு வாக்களிக்கவில்லை என்றால், வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைத்து கொளுத்துகின்றனர் என்று காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழுத் தலைவர் கே.ஆர் ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

“அதிமுக-விற்கு வாக்களிக்காத ஆத்திரத்தில் பெட்டிகளுக்கு தீ வைக்கிறார்கள்” : கே.ஆர்.ராமசாமி  குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் 2-ம் கட்ட வாக்குபதிவு 27 மாவட்டங்களில் உள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, 10.41% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ வும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கப்பலூர் தொடக்கப்பள்ளியில் வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உள்ளாட்சித் தேர்தலில் நடப்பதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக சின்னங்கள் ஒதுக்குவது, வாக்குச்சாவடி எண்களை மாற்று போன்ற குளறுபடிகளை திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.

தற்பொது நடத்தப்படும் இந்த தேர்தலை ஒரு நாகரிகமான தேர்தலாக நான் கருதவில்லை. அ.தி.மு.கவிற்கு வாக்களிக்கவில்லை என்றால், வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைத்து கொளுத்துகின்றனர். அவர்களை எதிர்க்கும் மக்களை வாக்களிக்கவிடாமல் தடுக்கின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இல்லவே இல்லை.

அவர்கள் தங்களிடம் இருக்கும் பணபலத்தை வைத்து . உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றலாம் என்று நம்புகின்றனர். மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று, மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories