தமிழ்நாடு

வாக்குப்பதிவு தொடங்கியபோதே வாக்குச்சீட்டுகளில் முத்திரை - சேலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர்!

சேலத்தை அடுத்த ஓமலூர் தொகுதிக்குட்பட்ட காருவள்ளி கிராமத்தில் 63 வாக்குச் சீட்டுகளில் இரட்டை இலை சின்னத்தில் முத்திரை குத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு தொடங்கியபோதே வாக்குச்சீட்டுகளில் முத்திரை - சேலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சேலத்தை அடுத்த ஓமலூர் தொகுதிக்குட்பட்ட காருவள்ளி கிராமத்தில் 63 வாக்குச் சீட்டுகளில் இரட்டை இலை சின்னத்தில் முத்திரை குத்தப்பட்டிருந்ததால் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு தொடங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்தை அடுத்த ஓமலூர் தொகுதிக்குட்பட்ட காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 12வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு சந்தானம் போட்டியிடுகிறார். இந்நிலையில் காருவள்ளி கிராமத்திலுள்ள 127வது வாக்குச் சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் வாக்குப்பதிவு புத்தகத்தில் உள்ள 63 வாக்குச் சீட்டுகளில் இரட்டை இலை சின்னத்தில் முத்திரை பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சிகளின் முகவர்கள் வாக்குப் பதிவை நிறுத்த வேண்டுமென அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல் வகாப் உள்ளிட்ட தி.மு.கவினர் சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு 10 வாக்கு புத்தகங்கள் மாற்றப்பட்டு சீல் வைத்து புதிய வாக்கு புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச் சீட்டு குளறுபடியால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 2 மணி நேரம் கழித்து வாக்கு பதிவு செய்தனர்.

banner

Related Stories

Related Stories