தமிழ்நாடு

பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் - மு.க.ஸ்டாலின் வேதனை!

2018-2019ம் ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு, இந்தியாவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது குறித்து வேதனை தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் - மு.க.ஸ்டாலின் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஆபத்தில் இருக்கும் குழந்தைகளுக்கான நாடு தழுவிய அவசரகால தொலைபேசி சேவையான சைல்ட் லைன் வெளியிட்ட தரவுகளின் படி, கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் மிக அதிக புகார்கள் பதிவாகியுள்ளன.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன், சைல்ட்லைன் 1098 இந்தியா முழுவதும் 522 மாவட்டங்களையும் 100 ரயில் நிலையங்களையும் உள்ளடக்கிச் செயல்படுகிறது. இந்நிலையில், சைல்ட் லைன் 2018-2019ம் ஆண்டுக்கான தரவுகளை வெளியிட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் - மு.க.ஸ்டாலின் வேதனை!

2018-19ம் ஆண்டில், இந்தியா முழுவதிலும் இருந்து சைல்ட்லைனுக்கு கிட்டத்தட்ட 60,000 புகார்கள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பான புகார்கள் முதலிடத்தில் உள்ளன (37%). உடல் ரீதியான துன்புறுத்தல் 27%, பாலியல் வன்கொடுமை 13%, மனதளவிலான வன்கொடுமை 12%, மற்றும் கடுமையாக தண்டிப்பது குறித்து 4% புகார்களும் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் - மு.க.ஸ்டாலின் வேதனை!

நாடு முழுவதும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வோரில் நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பராமரிப்பாளர்கள் மற்றும் முதலாளிகள் ஆகியோர் 73 சதவீதமாக உள்ளனர் என சைல்ட்லைன் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

குழந்தைகள் துன்புறுத்தல் தொடர்பான புகார்களில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக கேரளா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அ.தி.மு.க ஆட்சியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு, இந்தியாவில் இரண்டாவது மாநிலமாகியுள்ளது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில், ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினாலும், காவல்துறையாவது தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories