இந்தியா

பாலியல் வன்கொடுமை குற்றங்களை ஊக்குவிக்கிறதா பா.ஜ.க அரசு? - 2002 குஜராத் வன்முறையும் இன்றைய காலகட்டமும்!

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது அதனை அரங்கேற்றிய இந்துத்வா கும்பல் பாலியல் வல்லுறவை ஆயுதமாக பயன்படுத்தியதாக அப்போது வெளியான அறிக்கைகள் அம்பலப்படுத்தின.

பாலியல் வன்கொடுமை குற்றங்களை ஊக்குவிக்கிறதா பா.ஜ.க அரசு? - 2002 குஜராத் வன்முறையும் இன்றைய காலகட்டமும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் நாடுமுழுவதும் நிகழ்ந்த மிகப்பெரிய வகுப்புவாத படுகொலைகள், மிருகத்தன தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொலைகள் என வகைப்படத்தி பல்வேறு அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக, கடந்த 1983 பிப்ரவரி 18ம் தேதி அஸ்ஸாமில் திவா, கோச் என்ற இரு சமூகங்களைச் சார்ந்த வன்முறைக் கும்பல் வாள், பெட்ரோல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நெல்லியில் நுழைந்து மூவாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை கொடூரமாக படுகொலை செய்தது. அதனையடுத்து, 1984-ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வெடித்த கலவரத்தில் குறிவைத்து தாக்கப்பட்டது சீக்கிய சமுதாயம்.

அடுத்தாக பாகல்பூர் கலவரம் 1989-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் பீகார் மாநிலத்திலுள்ள பாகல்பூர் நகரில் நடைபெற்றது. இக்கலவரத்தினால் சுமார் 1,000 மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் சுமார் 900 பேர் முஸ்லிம்கள். மேலும் 50,000 முஸ்லீம் மக்கள் இடம்பெயர்ந்தனர். அந்த காலகட்டத்தில் சுதந்திர இந்தியாவின் மோசமான இந்து முஸ்லீம் கலவரம் இது எனக் கருதப்பட்டது.

பாலியல் வன்கொடுமை குற்றங்களை ஊக்குவிக்கிறதா பா.ஜ.க அரசு? - 2002 குஜராத் வன்முறையும் இன்றைய காலகட்டமும்!

இந்த தாக்குதல்கள் அனைத்தும் குறிப்பிட்ட மதத்தின் மீது நடைபெற்ற தாக்குதல், இந்த தாக்குதல் திட்டமிடாமல் நடத்தப்பட்டது என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால், 2002ல் நடைபெற்ற குஜராத் வன்முறை என்பது திட்டமிடப்பட்டு கொடூரமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை என்று பல வெளிநாட்டு ஊடகங்களே தெரிவித்திருந்தன.

குஜராத் வன்முறை எனக் குறிப்பிடுவது இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே 2002-ம் ஆண்டில் மூன்று மாதங்களுக்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடந்த மதக்கலவரம் ஆகும். பிப்ரவரி 27 அன்று அயோத்தியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டியை கோத்ரா ரயில் நிலையத்தின் அருகே வன்முறையாளர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

இதில், அந்த தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர். இதில் இந்துகளும் முஸ்லீம்களும் அடங்குவார்கள். ஆனால் இந்துத்வா வன்முறையாளர்களால் இந்த பிரச்னை மாநிலம் முழுவதும் தீயாகப் பரவி முஸ்லீம் மக்கள் மீதான வெறுப்பை அதிகப்படுத்தியது.

குறிப்பாக இந்தப் படுகொலை சம்பவத்தின் போது பெண்கள், இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் கொடூரமான தாக்குதல் மற்றும் கொடூரமான பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகினர்.

பாலியல் வன்கொடுமை குற்றங்களை ஊக்குவிக்கிறதா பா.ஜ.க அரசு? - 2002 குஜராத் வன்முறையும் இன்றைய காலகட்டமும்!

இந்த வன்முறை குறித்து தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் படுகொலையின் போது பெண்கள் பாலியல் வன்முறை, பாலியல் வல்லுறவு, கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் ஆயுதம் கொண்டு தாக்குதல் போன்றவற்றை அனுபவித்தனர் என்றும், அதில் தப்பிப்பிழைத்தவர்களில், பலர் தாக்குதல்களைப் பற்றி பேசியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பலர் இந்தத் தாக்குதலுக்கு பயந்தும், சொந்த குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கு பயந்தும் இதுபற்றி பேசாமல் அமைதியாகிவிட்டதாகவும் அதில் தெரிவிக்கின்றனர்.

குஜராத் அரசால் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட சோகமான மற்றும் கொடூரமான படுகொலை சம்பவம் இது எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தை அடிபணியச் செய்வதற்கும் அவமானப்படுத்துவதற்கும் பாலியல் வல்லுறவு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தச் சம்பவத்தின் போது பதியப்பட்ட வழக்குகளில் ஆதாரங்கள் அதிகமாக இருந்ததாகவும் அவை வேண்டுமென்றே அழிக்கப்பட்டதாக கூறுகின்றனர். பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுத்தப்பட்டு உடைகள் பறிக்கப்பட்டு நிர்வாணமாக அணிவகுத்துச் செல்ல வைக்கப்பட்டனர். பின்னர் அந்த கும்பலால் குத்திக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர்.

பாலியல் வன்கொடுமை குற்றங்களை ஊக்குவிக்கிறதா பா.ஜ.க அரசு? - 2002 குஜராத் வன்முறையும் இன்றைய காலகட்டமும்!

குறிப்பாக, பாலியல் வன்முறைகளுக்குப் பிறகு, கூட்டு பாலியல் வல்லுறவு, உறுப்புகளை சிதைத்தல், ஆயுதம் கொண்டு தாக்குதல், பெண்களின் மார்பகங்களை வெட்டுவது மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை வெட்டுதல் மற்றும் பெண்களின் உடல் பாகங்களில் இந்து மத அடையாளங்களை செதுக்குதல் ஆகிய கொடூரச் செயல்களையும் மேற்கொண்டனர்.

இந்த தகவலை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அடங்கிய சர்வதேச உண்மை கண்டறியும் குழுவினர், ‘மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களை அச்சுறுத்துவதற்கான ஒரு உத்தியாக பாலியல் வன்முறை பயன்படுத்தப்பட்டது என்று அவர்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது, கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு தப்பிப் பிழைத்த பஞ்ச் மஹால்ஸில் உள்ள எரல் கிராமத்தைச் சேர்ந்த சுல்தானி அந்தச் சம்பவத்தை குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, “எனது 5 வயது மகனை தூக்கிக்கொண்டு கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓடினேன்.

ஆனால் ஒருவர் என்னை பின்னால் இருந்து இழுத்து எனது மகனை பிடுங்கி தரையில் வீசினார்கள். விழுந்த அதிர்ச்சியில் என் மகன் எழமுடியாமல் அழ ஆரம்பித்தான். என் உடைகள் அவர்களால் பறிக்கப்பட்டன, நான் நிர்வாணமாக இருந்தேன். ஒவ்வொருவராக என்னை பாலியல் வல்லுறவு செய்தனர். என் மகன் அழுவதை என்னால் கேட்க முடிந்தது. பின்னர் அவர்கள் கூர்மையான ஆயுதத்தால் என் பாதத்தை வெட்டி என்னை அங்கேயே விட்டுவிட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை குற்றங்களை ஊக்குவிக்கிறதா பா.ஜ.க அரசு? - 2002 குஜராத் வன்முறையும் இன்றைய காலகட்டமும்!

அவரைத் தொடர்ந்து அதே கிராமத்தைச் சேர்ந்த மதீனா என்ற தாய் கூறுகையில், “எனது 2 மகள்களை அவர்கள் இழுத்துச் சென்றார்கள். என் மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டபோது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் மகள் ஒரு பூவைப் போல இருந்தாள், இன்னும் வாழ்க்கையை அனுபவிக்கவேண்டியவள்.

அவர்கள் ஏன் இதை அவளிடம் செய்ய வேண்டியிருந்தது? இவர்கள் அரக்கர்கள். என் அன்பு மகளை துண்டு துண்டாக கிழித்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு, கும்பலில் ஒருவர் அவளை கண்டந்துண்டமாக வெட்டுங்கள் என்றார், அதனையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வெளியே சென்றார்கள்” என அந்தக் கோரச் சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

பல அறிக்கைகள் குறிப்பிடும் மிகக் கொடூரமான சம்பவம் ஒன்றை கசுஸர் பானோ அனுபவித்திருக்கிறார். அதுகுறித்து கசுஸர் பானோவின் உறவினர் சாய்ரா பானோ கூறுகையில், “கசுஸர் பானோ என் மைத்துனரின் சகோதரி. அவளுக்கு அந்த கும்பல் செய்தது கொடூரமானது. அவள் ஒன்பது மாத கர்ப்பமாக இருந்தாள். அவர்கள் அவளது வயிற்றை கிழித்து, அவளது கருவை ஒரு வாளால் வெளியே எடுத்து எரியும் நெருப்பில் எறிந்தார்கள். பின்னர் அவர்கள் அவளையும் எரித்தனர்.” என அதிர்ச்சியோடு தெரிவித்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை குற்றங்களை ஊக்குவிக்கிறதா பா.ஜ.க அரசு? - 2002 குஜராத் வன்முறையும் இன்றைய காலகட்டமும்!

அதேபோல அந்தக் கலவரத்தின் போது இந்துத்வா கும்பலால் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் இந்துத்வ கும்பலால் தன்னுடைய குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டதை நேரில் கண்டவர். அவர் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில், பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

மேலும், நீதிமன்ற விசாரணையில் முன்னதாக விடுவிக்கப்பட்டிருந்த 5 போலிஸார் மற்றும் 2 மருத்துவர்களும் சாட்சியங்களை அழித்துவிட்ட வகையில் நீதிமன்றம் அவர்களையும் குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை வழங்கியுள்ளது.

குஜராத் கலவரத்தில் தொடர்புடைய இன்னும் ஏராளமான இந்துத்வ வெறியர்கள் அப்போதைய ஆளும்கட்சியான பா.ஜ.க அரசின் தயவால் காப்பாற்றப்பட்டனர். அப்போது குஜராத்தை ஆண்டது தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான அரசு.

தற்போதும் இந்தியா அதுபோன்ற சூழலைச் சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் மலிந்துள்ளன. தினசரி, நாடெங்கும் பெண்களுக்கு எதிரான குற்றச் செய்திகளுக்கு காதுகொடுக்க வேண்டியிருக்கிறது. இதைத் தடுக்க, அரசு எந்தவொரு பெரிய முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை. 2002ல் குஜராத்தில் கொடூரமான பாலியல் குற்றங்களை அரங்கேற்றியவர்களைக் காப்பாற்றியது போல, இப்போதும் செயல்படுகிறதா பா.ஜ.க அரசு?

banner

Related Stories

Related Stories