தமிழ்நாடு

தொடர்ந்து அதிகரிக்கும் வெங்காய விலை : டெல்லி நிலை விரைவில் தமிழகத்துக்கும் வருமா ? - மக்கள் அச்சம்

அத்தியாவசியப் பொருள்கள் சிரமமின்றிக் கிடைக்கச் செய்வதும், அதன் விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதும் அரசின் கடமை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அதிகரிக்கும் வெங்காய விலை : டெல்லி நிலை விரைவில் தமிழகத்துக்கும் வருமா ? - மக்கள் அச்சம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நம் அன்றாட சமையலுக்கு வெங்காயம் இன்றியமையாதது ஆகும். ஆனால், கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் விலை சில நாட்களாக கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது.

இந்தியாவில் மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் தான் வெங்காயத்தை அதிகளவில் உற்பத்தி செய்கின்றது. கடந்த சில மாதங்களாக இம்மாநிலங்களில் கொட்டித் தீர்த்த தென்மேற்கு பருவமழையால் வெங்காயப் பயிர்கள் அழிந்தன.

இதனால் அங்கு இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்து விட்டது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை திடீரென அதிக அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் வெங்காய விலை : டெல்லி நிலை விரைவில் தமிழகத்துக்கும் வருமா ? - மக்கள் அச்சம்

கோயம்பேடு சந்தையில் மீண்டும் வெங்காயம் தற்போது கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் கூறுகையில், கையில் இருந்த வெங்காய இருப்பு தான் இதுவரை விற்கப்பட்டது. ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் பெய்த மழையால் அங்குள்ள பயிர்கள் அழிந்தன.

அதனால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை உயர்ந்தது. இனிமேல் அறுவடை செய்யப்படும் புதிய வெங்காயம் வந்தால்தான் விலை குறையும்'' என வியாபாரிகள் கூறினர். வெங்காயம் குறைந்த விலையில் தங்குதடையின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் சிரமமின்றிக் கிடைக்கச் செய்வதும் - அதன் விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதும் அரசின் கடமை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்து காய்கறிகளையும் போல, வெங்காயமும் மிக மிக அத்தியாவசியமானது. அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது, சாமானிய மக்களுக்குப் பெரிதும் சிரமம் ஏற்படுத்தும். அத்தியாவசியப் பொருள்கள் சிரமமின்றிக் கிடைக்கச் செய்வதும் - அதன் விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதும் அரசின் கடமை'' என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அதிகரிக்கும் வெங்காய விலை : டெல்லி நிலை விரைவில் தமிழகத்துக்கும் வருமா ? - மக்கள் அச்சம்

முன்னதாக கடந்த மாதம் வெங்காய விலை அதிகமானதை அடுத்து டெல்லி அரசு, வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories