தமிழ்நாடு

“தங்கப்பதக்கத்தை சுஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன்”: செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இளம் வீரர் உருக்கம்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவர் பிரக்னாநந்தா, தனது சாம்பியன் பட்டத்தை சுஜித்திற்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

“தங்கப்பதக்கத்தை சுஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன்”: செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இளம் வீரர் உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலக அளவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளம் வீரர் மாணவர் பிரக்னாநந்தா நேற்று தனது பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த விழாவின் தொடக்கத்தில், ஆழ்துறை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் வில்சனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரக்னாநந்தா உள்பட மாணவர்களும், ஆசிரியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது இளம் வீரர் பிரக்னாநந்தா போட்டியில் வெற்றி பெற்ற சாம்பியன் பட்டத்தை சுஜித் வில்சனுக்கு சமர்ப்பித்தார்.

அப்போது பேசிய அவர், “தான் பெற்ற தங்கப் பதக்கத்தை சுஜீத்திற்கு அர்ப்பணிக்கிறேன். இதுபோல சம்பவம் இனி நடக்கக்கூடாது. அதனை அனைவரும் பொறுப்பேற்று கவனிக்க வேண்டும். பள்ளிகளில் என்னைப்போல பல மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். பிரக்னாநந்தாவின் இந்தப் பேச்சு கூடியிருந்தவர்களை நெகிழச் செய்தது.

மேலும் இந்த விழாவின் போது பிரக்னாநந்தாவை பெருமைப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட செஸ் பலகையில் பிரக்னாநந்தா மற்றும் சுஜித் வில்சனின் முகமூடி அணிந்த மாணவர்கள் தங்களை செஸ் காய்களாக உருவகித்து நின்றிருந்தனர்.

banner

Related Stories

Related Stories