தமிழ்நாடு

அஜாக்கிரதையும், அலட்சியமும் தமிழ்ச் சமூகத்தின் தொடர் பண்பாகிவிட்டது - சுஜித் குறித்து நடிகர் விவேக் !

ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் சிக்கியுள்ளது குறித்து நடிகர் விவேக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அஜாக்கிரதையும், அலட்சியமும் தமிழ்ச் சமூகத்தின் தொடர் பண்பாகிவிட்டது - சுஜித் குறித்து நடிகர் விவேக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சியில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுஜித் (2) தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான்.

கிட்டத்தட்ட 20 மணிநேரத்திற்கும் மேலாக குழிக்குள் சிக்கியிருக்கும் குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அஜாக்கிரதையும், அலட்சியமும் தமிழ்ச் சமூகத்தின் தொடர் பண்பாகிவிட்டது - சுஜித் குறித்து நடிகர் விவேக் !

70 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பதால் மீட்கும் பணி மிகுந்த சவால் நிறைந்ததாக உள்ளது. மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வருகின்றனர். சிறுவனை மீட்கக் கோரி நாடெங்கிலும் இருந்து கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விவேக், “சுஜித்தை மீட்க நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்ரதையும், அலட்சியமும் பொறுப்பற்ற இந்த சமூகத்தின் தொடர் பண்புகளாக ஆகிவிட்டன.

இது போன்ற குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனையே தீர்வாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories