சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பின்புறம் மெட்ரோ குடிநீர் நிர்வாகத்தினருக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் இன்று மதியம் 3.30 மணி அளவில் திடீரென்று தீ பிடித்தது. காய்ந்த புற்களில் ஏற்பட்ட தீ முழுவதும் பரவியது. தகவல் அறிந்து 8 தீயணைப்பு வண்டிகளில் வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வானுயர பரவிய புகை மண்டலத்தால் வாகனங்களில் செல்பவர்களுக்கு கண்எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல். கோயம்பேடு பேருந்து நிலையத்தையே புகை மண்டலம் மூடிவிட்டது. வாகனங்களில் செல்பவர்கள் இதனை வேடிக்கை பார்ப்பதும் செல்போனில் படம் பிடிப்பதுமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் காலி நிலங்களில் காய்ந்த புற்கள், செடிகள் அதிகம் இருப்பதால், வெயில் காலத்தில் தீ பற்றி ஏறியும் நிலை ஏற்பட்டக்கூடும் எனவே அரசே அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.