ஃபானி புயல் இன்று அதிகாலை அதி தீவிர புயலாக வலுப்பெற்று சென்னையின் தென் மேற்கே 575 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வடக்கு மற்றும் வடகிழக்கில் உள்ள ஒடிசா கடற்கரையை நோக்கிச் செல்லக்கூடும்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மணிக்கு 30-50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
ஆகையால் இன்று தென் மேற்கு வங்கக்கடலுக்கும், நாளை மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடலுக்கும் மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.