விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தினால் இந்தியாவை வீழ்த்த முடியுமா ? - வங்கதேச அணிக்கு தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை !

பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதால் மட்டுமே வங்கதேச அணி இந்திய அணியை அசைத்து பார்த்திட முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானை வீழ்த்தினால் இந்தியாவை வீழ்த்த முடியுமா ? - வங்கதேச அணிக்கு தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் இந்த தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்த வங்கதேச அணி 12 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தது. அதோடு ஒரே ஒரு போட்டியை மட்டுமே டிரா செய்திருந்தது.

ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

பாகிஸ்தானை வீழ்த்தினால் இந்தியாவை வீழ்த்த முடியுமா ? - வங்கதேச அணிக்கு தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை !

வங்கதேச அணி தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளது. இந்த தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேச வீரர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதால் மட்டுமே வங்கதேச அணி இந்திய அணியை அசைத்து பார்த்திட முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், ” இந்திய அணியை இந்திய மண்ணில் வைத்து வீழ்த்துவது மிகப்பெரிய விஷயம். வங்கதேசம் அணி பாகிஸ்தான் மண்ணில் சிறப்பாக செயல்பட்டுள்ளதற்காக எல்லாம் இந்திய அணியை அசைத்து பார்த்திட முடியாது.என்னைப் பொருத்தவரை இந்திய அணிக்கு ஈடுகொடுத்து வங்கதேசம் அணியால் விளையாட முடியாது என்றே சொல்வேன்.

இந்திய அணி வீரர்களுக்கு 43 நாட்கள் தொடர் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் இந்த தொடரை உற்சாகமாக தொடங்குவார்கள். பேட்டிங் மற்றும் பவுலிங் இந்திய அணிக்கு சவால் கொடுப்பது வங்கதேச அணிக்கு எளிதாக இருக்காது. கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்தது இல்லை” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories