விளையாட்டு

இலங்கையை White Wash செய்த இந்திய அணி... முதல் தொடரிலேயே முத்திரை பதித்த கம்பீர் - சூர்யா இணை !

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இலங்கையை White Wash செய்த இந்திய அணி... முதல் தொடரிலேயே முத்திரை பதித்த கம்பீர் - சூர்யா இணை !
Kunal Patil
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் செயல்படவுள்ள நிலையில் அது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனாக சூர்யகுமாரும், துணை கேப்டனாக சுப்மான் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல ஒருநாள் தொடருக்கான அணியை ரோஹித் சர்மா தலைமை தங்கவுள்ள நிலையில், துணை கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. தொடர்ந்து முன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இலங்கையை White Wash செய்த இந்திய அணி... முதல் தொடரிலேயே முத்திரை பதித்த கம்பீர் - சூர்யா இணை !

இதில் முதலில் ஆடிய இந்திய அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக ஆடிய கில் (38 ரன்கள்), ரியான் பராக் (26 ரன்கள் ), வாஷிங்டன் சுந்தர் (25 ரன்கள் ) குவிக்க 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியது. இறுதிக்கட்டத்தில் 30 பந்துகளுக்கு 30 ரன்களே வே ட்ரிக்கு தேவைப்பட்ட நிலையில், அந்த அணியின் கையில் 9 விக்கெட் இருந்தது. எனினும் அங்கிருந்த அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அணி இறுதியில் 20 ஓவர்களில் 137 ரன்கள் குவிக்க , போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

இதில் இலங்கை அணி 2 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில், இந்திய அணி அதனை முதல் பந்திலேயே இலக்கை எட்டி போட்டியை அபாரமாக வென்றதோடு தொடரையும் 3-0 என வென்றது. அடுத்ததாக முதல் ஒருநாள் போட்டி வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெறவுள்ளது.

banner

Related Stories

Related Stories