நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான சென்னை அணியும், பெங்களூர் அணிகள் சேப்பாக்கம் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றிபெற்றது.
முன்னதாக சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என அணி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 13 ஆண்டு காலம் சென்னை அணிக்கு தோனி தலைமை தாங்கி நிலையில் தற்போது ருதுராஜ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சி கோப்பை தொடர் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வரும் நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தங்கப்பதக்கம் வேண்டு கொடுத்தார். இதன் காரணமாக அவர் சென்னை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜாம்பவான் தோனியின் இடத்தில சென்னை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணி வீரர் சூர்யகுமார் CSK அணியின் பாரம்பரியத்தை நீங்கள் முன்னெடுத்துச் செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன் என ருதுராஜை பாராட்டியுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், " உங்களுக்குஒரு பெரிய வீரரின் இடத்தை நிரப்ப வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த உண்மையை யாராலும் நிராகரிக்க முடியாது. உங்களில் அமைதியான இயல்பினால், சிஎஸ்கே அணியின் பாரம்பரியத்தை நீங்கள் முன்னெடுத்துச் செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் அன்பும் அதிர்ஷ்டமும் கிடைக்க விரும்புகிறேன்"என்று கூறியுள்ளார்.