விளையாட்டு

INDvsENG : 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி : ஆட்டநாயகன் விருது வென்று அசத்திய பும்ரா !

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

INDvsENG : 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி : ஆட்டநாயகன் விருது வென்று அசத்திய பும்ரா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியில் ரஜத் படிதார் அறிமுகமானார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமனையில் அபாரமாக ஆடிய துவக்க வீரர் ஜெய்ஸ்வால், 151 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் இரட்டை சதம் விளாசி 290 பந்துகளில் 209 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விரைவு கதியில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 396 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

INDvsENG : 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி : ஆட்டநாயகன் விருது வென்று அசத்திய பும்ரா !

தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையோடு தனது இரண்டாம் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணியில் இளம்வீரர் சுப்மான் கில் அபாரமாக ஆடி சதம் விளாசினார். அவரின் அந்த இன்னிங்க்ஸ் காரணமாக இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் 399 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் தொடக்க வீரர் கிராவ்லி அதிகபட்சமாக 73 ரன்கள் விளாச இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்திய முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்திய பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories