22-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோலாகலமாகத் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
பரபரப்பாக சென்ற இறுதிப்போட்டி ஆட்ட நேர முடிவில் சமநிலையில் இருந்தது. அதன் காரணமாக போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்று மூன்றாவது முறையான உலகக்கோப்பையை வென்றது.
அதனைத் தொடர்ந்து வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் கூட்டாக நடத்துகின்றன. முந்தைய உலககோப்பைகளில் 36 அணிகள் பங்கேற்ற நிலையில். 2026-ம் ஆண்டுஉலகக்கோப்பையில் 48 அணிகள் பங்கேற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 2026 ஃபிபா கால்பந்து உலக்கோப்பைக்கான விவரங்களை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA ) அறிவித்துள்ளது. அதன்படி, கால்பந்து உலகக் கோப்பை 2026-ம் ஆண்டு ஜுன் 11ம் தேதி மெக்சிகோவின் அஸ்டெகா மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இந்த தொடர் மொத்தம் 104 இடங்களில் நடைபெறவுள்ளது. தொடக்க ஆட்டம் வரை இறுதிஆட்டம் வரை 104 போட்டிகள் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டி ஜுலை 19ம் தேதி, அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ருதர்ஃபோர் நகரின் மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது.
அமெரிக்காவின் அட்லாண்டா மற்றும் டெல்லாஸ் பகுதிகளில் அரையிறுதி போட்டிகளும், மூன்றாவது இடத்திற்கான போட்டி மியாமியிலும் நடைபெற உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ், கன்சாஸ் சிட்டி, மியாமி மற்றும் டன் ஆகிய இடங்களில் காலிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது.