விளையாட்டு

தனது முகத்தை வைத்து வெளியான Deep fake வீடியோ : கடும் எச்சரிகை விடுத்த சச்சின் - அதில் இருந்தது என்ன ?

சச்சினின் Deep fake வீடியோ வலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் சிக்கியுள்ளார்.

தனது முகத்தை வைத்து வெளியான Deep fake வீடியோ : கடும் எச்சரிகை விடுத்த சச்சின் - அதில் இருந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப சில ஆண்டுகளில் Artificial Inteligence தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, ஒடிசா செய்தி தொலைக்காட்சி ஒன்று சாதனை படைத்தது.

அதோடு ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற "காவலா.." பாடலுக்கு காஜல், சிம்ரன் உள்ளிட்ட நடிகைகள் நடனமாடுவது போல் AI-ஐ பயன்படுத்தி வீடியோக்களும் வெளியானது. இதனை ஒரு தரப்பு ரசிகர்கள் ஆச்சயர்த்துடன் கண்டு ரசித்தாலும், மற்ற சிலர் அதற்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர்.

அதே போல சில நாட்களுக்கு முன்னர், ராஷ்மிகாவின் AI தொழில்நுட்ப வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் வேறு ஒரு பெண்ணின் முகத்தில் ராஷ்மிகாவின் முகத்தை பொருத்தி அவர் பிகினி ஆடையில் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதே போல பல்வேறு நடிகைகளின் Deep fake வீடியோ வெளியாகியுள்ளது.

தனது முகத்தை வைத்து வெளியான Deep fake வீடியோ : கடும் எச்சரிகை விடுத்த சச்சின் - அதில் இருந்தது என்ன ?

இந்த நிலையில், சச்சினின் Deep fake வீடியோ வலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் சிக்கியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக சச்சின் டெண்டுல்கர் பேசுவது போல ஒரு Deep fake வீடியோ வைரலானது. அதில், தனது மகள் சாரா ஆன்லைன் வீடியோ கேம் மூலம் பல பணத்தை சம்பாதித்து வருவதாகவும், இதனை ரசிகர்கள் நீங்களும் பயன்படுத்தி சம்பாதிக்கலாம் என சச்சின் கூறுவது போல வீடியோ இடம்பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து இது குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தனது முகத்தை வைத்து Deep fake வீடியோ வெளியானது என்றும், இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், சமூக வலைத்தள பயன்படுத்தவர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக வலைதள நிறுவனங்களும் இது போன்ற புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories