பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று மதுரை அலங்காநல்லூரில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து முதலாவது முனியாண்டி கோவில் சாமி கோவில் அவிழ்க்கப்பட்டது
இரண்டாவதாக அரியமலை கெங்கையம்மன் கோவில் காளை அவிழ்க்கப்பட்டது.மூன்றாவதாக வலசை தாய் கிராம நொண்டி கருப்புசாமி கோவில் காளை அவிழ்க்கப்பட்டது.
இந்த போட்டியில் 1200 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்றில் இரண்டு காளைகள் அடக்கி அடுத்த சுற்றுக்கு ஒரே வீரராக ஊர்சேரி கிராமத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவர் மட்டும் தேர்வாகினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டியில் சிவகங்கையை சேர்ந்த அபிசித்தர் 6 மாடுகள் பிடித்து முதலிடத்தில் உள்ளார் . இவர் கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலிடத்தை பிடித்திருந்தார்.
கட்டிக்குளத்தை சேர்ந்த சிவசேரன் என்பவர் 4 காளைகளை அடக்கி இரண்டாம் இடமும், வலையங்குளம் பாலமுருகன், இருங்கங்கோட்டை நல்லப்பா ஆகிய இருவரும் 2 காளைகளை அடக்கி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர்.