விளையாட்டு

#INDvNZ உலகக் கோப்பை தொடரில் சாதனை படைத்த விராட் கோலி : சச்சின் சாதனை முறியடிப்பு!

உலகக் கோப்பை தொடரில் இன்றிய போட்டியில் 50வது சதத்தை அடித்து விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

#INDvNZ  உலகக் கோப்பை தொடரில் சாதனை படைத்த விராட் கோலி : சச்சின் சாதனை முறியடிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டு வருகிறது. இது வரை ஆடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் அசைக்க முடியாத அணியாகஅரையிறுதிக்கு நுழைந்தது இந்திய அணி.

இதையடுத்து இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதிபோட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் விளையாடினர். இந்த ஜோடி சிறப்பாக ஆட்டத்தைத் தொடக்கிவைத்தது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 47 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய விராட் கோலி நிதானமாகத் தனது ஆட்டத்தை கில்லுடன் சேர்ந்து விளையாடி வந்தார்.

பிறகு கில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காலில் ஏற்பட்ட வலி காரணமாக 'ரிட்டயர்' முறையில் வெளியேறினார். பிறகு வந்த சிரேயாஸ் கோலியுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

#INDvNZ  உலகக் கோப்பை தொடரில் சாதனை படைத்த விராட் கோலி : சச்சின் சாதனை முறியடிப்பு!

இந்தப்போட்டியில் நிதானமாக விளையாடி விராட் கோலி தனது 50வது சதத்தை அடித்து உலக சாதனை படைத்தார். மேலும் கிரிக்கெட் உலகின் கடவுளாகப் போற்றப்படும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் இந்த 50வது சதத்தின் மூலம் முறியடித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சினின் அடித்த 49-சதங்களே சாதனையாக இருந்தது. இதை யாரும் அசைக்கவே முடியாது என்று இருந்தது. ஆனால் விராட்டிகோலியின் அதிரடி ஆட்டங்கள் சச்சின் சாதனையை இவர் முறியடிப்பார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் சச்சின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார். மேலும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். ஒரேநாளில் ஒரே போட்டியில் சச்சினின் இரண்டு சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார்.

இந்தபோட்டியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதில் விராட் கோலி, ஸ்ரேயர்ஸ் ஆகிய இருவர் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories