2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த தோல்வியோடு பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பின்னர் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராகவும் தோல்வியைத் தழுவியது. ஆனால், அதன் பின்னர் பங்களாதேஷ் நியூஸிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தியது.
அதன் பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் அரையிருக்கு தகுதி பெற முடியாமல் பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியது. மேலும், டந்த டி20 உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு விமர்சிக்கப்பட்டது. அதோடு கடந்த உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாமல் வெளியேறியது.
சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியால் இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெறமுடியவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமே காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதே நேரம் சில முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியின் நிர்வாகத்தின் கட்டமைப்பே காரணமே என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு நிர்வாகம் காரணம்ல்ல, கேப்டன் பாபர் அசாமே காரணம் என பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகமது அமீர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ” இதே நிர்வாக கட்டமைப்பே வைத்துதான் 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றோம், 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம், 2009 டி20 உலகக் கோப்பை மற்றும் 2017 சாம்பியன் டிராபிகளையும் வென்றோம்.
2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு, மோர்கன் அதே அணி கட்டமைப்பை வைத்துதான் 2019 உலகக்கோப்பையை வென்றார். பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கேப்டனாக வந்து அணியின் நிலையை மாற்றினார். தோனியும் அதைதான் செய்தார். ஆக நிர்வாக கட்டமைப்பு தோல்விக்கு காரணமல்ல, நமது தோல்விக்கு காரணம் கேப்டன் பாபர் அசாம்தான்” என்று கூறியுள்ளார்.