விளையாட்டு

ICC ஒருநாள் போட்டி தரவரிசை : முதலிடம் பிடித்த கில், சிராஜ் - டாப் 10 இடங்களில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் !

இந்திய வீரர் சுப்மான் கில் ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ICC ஒருநாள் போட்டி தரவரிசை : முதலிடம் பிடித்த கில், சிராஜ் - டாப் 10 இடங்களில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக இளம்வீரர் சுப்மான் கில் உருவாகியுள்ளார். கவாஸ்கர்,சச்சின், கோலி என ஒவ்வொரு தலைமுறைக்கும் சிறப்பாக ஒரு மட்டைவீச்சாளரை இந்தியா தொடர்ந்து உருவாகிவரும் நிலையில், கோலிக்கு பின்னர் அந்த இடத்துக்கு வருவது யார் என்ற கேள்வி எழுந்தது.

தற்போதைய நிலையில், கோலிக்கு பின் இந்திய மட்டைவீச்சை வழிநடத்துபவராக சுப்மான் கில் இருப்பார் என பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற யு-19 போட்டியில் சிறப்பான செயல்பட்ட கில் அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்த கில் கடந்த 2019-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் தனது இடத்தை தக்கவைத்த கில், மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக மாறியுள்ளார். அதிலும் கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்து சாதனை படைத்ததோடு, அதே மாதம் டி20 போட்டியிலும் சதம் விளாசி இளம்வயதில் மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ICC ஒருநாள் போட்டி தரவரிசை : முதலிடம் பிடித்த கில், சிராஜ் - டாப் 10 இடங்களில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் !

தற்போது உலகக்கோப்பை அணியிலும் இந்திய அணியின் தொடக்க வீரரான களமிறங்கிய ஆடி வருகிறார். இந்த நிலையில், அவர் முதல் முறையாக ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர், 830 புள்ளிகளை பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதே நேரம் நீண்ட நாள் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், இந்த தொடரில் சுமாரான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் 824 புள்ளிகளோடு பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு சரிந்துள்ளார். அதே போல இந்திய வீரர் கோலி 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ரோஹித் சர்மா 6-வது இடத்தில் உள்ளார்.

இதே போல பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் மொஹமத் சிராஜ் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். குலதீப் யாதவ் 4-ம் இடத்திலும், பும்ரா 8-வது இடத்திலும், சமி 10-ம் இடத்திலும் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories