கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக ப்ரென்டன் மெக்கலமும், அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் இயான் மார்கன் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகப்படுத்தி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த அட்டாக்கிங் கேமை டெஸ்ட்டிலும் அறிமுகப்படுத்தினர்.
இவர்களின் இந்த புதிய பரிமாணம் bazball என அழைக்கப்பட்டது. இந்த முறையில் நியூஸிலாந்து, இந்தியா போன்ற அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் பலரும் இந்த bazball முறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.
இந்த bazball முறையை பின்பற்றி இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் அதிரடி ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை நடைபெற்றுள்ள 5 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி தோல்வியடைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்திலும் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. பின்னர் ஆடிய இலங்கை அணி 25.4 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. இந்த தோல்வி காரணமாக இங்கிலாந்து அணியில் அரையிறுதி கனவு ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளது.
இந்த தொடர் தோல்வி மூலம் bazball அணுகுமுறை அனைத்து தருணங்களிலும் வெற்றியடையாது என்பது உறுதியாகியுள்ளது. பேட்டிங்க்கு சாதகமான பிளாட் மைதானத்தில் மட்டுமே bazball அணுகுமுறை வேலைக்கு ஆகும் என்றும், மைதானம் சிறிய அளவில் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்தால் கூட bazball தோல்வியடையும் என்பது இங்கிலாந்து அணியின் தோல்வி மூலம் தெரியவந்துள்ளது