விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி : வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா.. கோல் அடித்து அசத்திய சுனில் சேத்திரி !

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டி : வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா.. கோல் அடித்து அசத்திய சுனில் சேத்திரி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளது.

இதில் இந்திய கால்பந்து அணி பங்கேற்க இந்திய அரசு அனுமதி மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததன் காரணமாக இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகளை ஆசிய விளையாட்டு போட்டிக்கு அனுப்ப ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது.

நாளை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னரே குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிளில் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்றாலும் அதில் 3 வீரர்கள் மட்டும் 23 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இருக்கலாம் என கூறப்பட்டதன் அடிப்படையில் சுனில் சேத்திரி இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார், '

ஆசிய விளையாட்டுப் போட்டி : வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா.. கோல் அடித்து அசத்திய சுனில் சேத்திரி !

இந்திய கால்பந்து அணி சீனாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் வங்கதேச அணியை நேற்று சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர்.

முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிவடைந்த நிலையில், இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களையும் கோல் அடிக்க முடியவில்லை. இந்த தருணத்தில் ஆட்டம் முடிய 5 நிமிடமே இருந்த நிலையில், இந்திய அணி பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி இந்திய வீரர் சுனில் சேத்திரி கோல் அடித்து அசத்த, இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர்-24ம் தேதி) இந்திய கால்பந்து அணி, மியான்மரை எதிர்கொள்ளவுள்ளது.

banner

Related Stories

Related Stories